வெள்ளி, 13 மார்ச், 2020

மோடியின் கொள்கைகள் இந்திய பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது: ராகுல் காந்தி

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் மத்திய அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய அரசோ, அதன் தீவிரத்தை உணராமல் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்தியாவின் வலிமையே அதன் பொருளாதாரம்தான் என தெரிவித்துள்ள ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் கொள்கைகள் அதனை சீரழித்துவிட்டதாக விமர்சித்துள்ளார். 

Rahul gandhi
ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ்  கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, ஜோதிராதித்ய சிந்தியா தன்னுடன் கல்லூரியில் படித்தவர் என்றும், அவரது கொள்கைகள் குறித்து தனக்கு தெரியும் என்றும் குறிப்பிட்டார். அந்த கொள்கைகளை கைவிட்டுவிட்டு, தற்போது அவர் ஆர்.எஸ்.எஸ் பக்கம் சென்றுவிட்டதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 
credit ns7.tv