வியாழன், 12 மார்ச், 2020

காங்கிரஸ் அரசுகளை கவிழ்ப்பதிலேயே பிரதமர் மோடி குறியாக உள்ளார் - ராகுல் காந்தி

Image
காங்கிரஸ் அரசுகளை கவிழ்ப்பதிலேயே பிரதமர் நரேந்திர மோடி குறியாக உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசுகளை கவிழ்ப்பதிலேயே பிரதமர் அலுவலகம் குறியாக இருப்பதால், நாட்டு மக்களுக்கு நலன் பயக்கும் நடவடிக்கைகளில் அது கவனம் செலுத்துவதில்லை என விமர்சித்துள்ளார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 35 சதவீதம் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, அதன் பலன் மக்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்றும், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை 60 ரூபாய்க்கும் கீழே குறைக்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வாறு குறைத்தால் மந்தநிலையில் உள்ள இந்திய பொருளாதாரம் எழுச்சி பெற உதவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
credit ns7.tv