7 3 2022
45-வது சென்னை புத்தகக் காட்சியில் 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்ததாக பபாசி அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி 45-வது புத்தகக் காட்சி தொடங்கியது. இதில் சுமார் 800 அரங்குகள் இடம்பெற்றன. இலக்கியம், பண்பாடு, வரலாறு என பல லட்சம் புத்தகங்கள் புத்தகக் காட்சியில் இடம்பெற்றிருந்தன. நேற்று புத்தகக் காட்சியின் கடைசி நாள் என்பதால் அனைத்து அரங்குகளிலும் வாசகர்கள் கூட்டம் களைகட்டியது.
அண்மைச் செய்தி: நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் – இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்குகிறது
இரவு 9 மணியுடன் புத்தகக் காட்சி நிறைவு பெற்ற நிலையில் எட்டு லட்சம் மாணவர்கள் உள்பட 15 லட்சம் வாசகர்கள் புத்தகக் காட்சிக்கு வருகை தந்ததாக பபாசி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு அம்பேத்கர், பெரியார் தொடர்பான புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையானதாகவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கூடுதலான வாசகர்கள் வருகை தந்ததாகவும் பபாசி கூறியுள்ளது.
source https://news7tamil.live/chennai-book-fair-periyar-and-ambedkar-books-are-selling-well.html