உலகின் 118 நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை நெருங்கிய நிலையில் பலி எண்ணிக்கை 4,600ஐ கடந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் கோவிட்19 என்றழைக்கப்படும் ஒரு வகையான கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டது. அங்கு தொடங்கிய கொரோனா வைரஸ் பரவல் இன்று உலகின் 118 நாடுகளில் சுமார் 1.25 லட்சம் பேரை பாதித்துள்ளது.
சீனாவில் அதிக அளவாக 3,169 உயிரிழப்புகளும், 80,793 பேருக்கு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு சமீபத்தில் நோய் பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் வைரஸ் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளது.
இத்தாலியில் சுமார் 12,000 பேரும், ஈரானில் 9,000 பேரும், தென் கொரியாவில் சுமார் 7,800 பேரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 73 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
சீனாவுக்கு வெளியே இத்தாலியில் 827 பேரும், ஈரானில் 354 பேரும், தென் கொரியாவில் 66 பேரும், ஸ்பெயினில் 55 பேரும், பிரான்சில் 48 பேரும், அமெரிக்காவில் 38 பேரும் உயிரிழந்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பு:
இதனிடையே கொரோனா வைரஸ் தாக்குதலை ‘Pandemic’ என வகைப்படுத்தி நேற்றிரவு உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
பெருமளவில் கட்டுப்படுத்த இயலாத வகையில் பூதாகரமாக எழும் தொற்று நோய் பரவலை 'பாண்டமிக்' என குறிப்பிடுகின்றனர்..
இதுவரை Epidemic என கொரோனா வகைப்படுத்தப்பட்டிருந்தது..
credit ns7.tv