வெள்ளி, 18 மார்ச், 2022

நிதிநிலை அறிக்கையை

தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்ட நிதிநிலை அறிக்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 18 03 2022 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசனுக்கும், அறிக்கையை தயாரிக்க உதவிய அரசு அதிகாரிகளுக்கும் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

சமூகநலத் திட்டங்களில் எந்தக் குறையும் வைக்காமல், வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து நிதி நிர்வாகத்தை வளர்த்துள்ளோம் என்பதை நிதிநிலை அறிக்கை எடுத்துக் காட்டி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் சிந்தனைகளை 21 மொழிகளில் எடுத்துச் செல்ல வழிவகுக்கும் அறிவிப்பு, பழமை வாத கருத்துகள் என்னும் இருள் கவ்வியிருக்கும் பகுதிகளுக்கு, அறிவொளி பாய்ச்சும் அறிவிப்பு எனக் கூறியுள்ளார். பத்தாண்டு கால சரிவைச் சரி செய்வது மட்டுமல்லாமல், அடுத்த 25 ஆண்டு கால உயர்வை உணர்த்துவதாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்..

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நூற்றாண்டு கால திராவிட சமூக நீதிக் கொள்கைகளையும், நவீனத் தேவைகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

பட்ஜெட் - கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2022 - 2023: ரூ.36,895.89 கோடி 2021 - 2022: ரூ.32,599.54 கோடி (திமுக அரசு) 2021 - 2022: ரூ.34,181.73 கோடி (அதிமுக அரசு) 2020 - 2021: ரூ.34,181.73 கோடி 2019 - 2020: ரூ.28,757.62 கோடி 2018- 2019: ரூ.27,205.88 கோடி


ஒரு ரூபாயில் தமிழ்நாடு அரசு செலவிடும் தொகை( பைசாவில்) ➤கடனை திருப்பிச் செலுத்த - 7 ➤கடனுக்கான வட்டி - 13 ➤கடன் வழங்க - 2 ➤சம்பளம் வழங்க - 20 ➤ஓய்வூதியம் - 10 ➤செயல்பாடு மற்றும் பராமரிப்புச் செலவு - 4 ➤மானியங்கள் - 32 ➤மூலதனச் செலவு - 12

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரால் தொடங்கப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், டான்சிம்க்கு (TANSIM) ரூ.30 கோடி நிதி வழங்கப்படும். - நிதியமைச்சர்


source https://news7tamil.live/tamil-nadu-budget-2022-23-report-by-chief-minister-mk-stalin.html