இந்திய பிரதமராக பதவியேற்று 8 ஆண்டுகள் ஆகின்றன. அவர் கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் முதன்முறையாக பதவியேற்றார். காங்கிரஸை தவிர்த்த வேறு கட்சி மத்தியில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது அதுவே முதன்முறை. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் தற்போது வரை 60-க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய 110 வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை அவர் மேற்கொண்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இந்த பயணக்கள் மூலமாக இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்தை அதிகரிக்கும் முயற்சியில் பிரதமர் உலக அரங்கில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி
2014-ஆம் ஆண்டில் 9 சுற்றுப்பயணங்களையும்,
2015-ஆம் ஆண்டில் 28 சுற்றுப்பயணங்களையும்,
2016-ஆம் ஆண்டில் 18 சுற்றுப்பயணங்களையும்,
2017-ஆம் ஆண்டில் 14 சுற்றுப்பயணங்களையும்,
2018-ஆம் ஆண்டில் 23 சுற்றுப்பயணங்களையும்,
2019-ஆம் ஆண்டில் 14 சுற்றுப்பயணங்களையும்,
2020-ஆம் ஆண்டில் 0 சுற்றுப்பயணங்களையும்,
2021-ஆம் ஆண்டில் 4 சுற்றுப்பயணங்களையும்,
2022-ஆம் ஆண்டில் 4 சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டுள்ளார்.
தில் 2015-ஆம் ஆண்டில் அவர் அதிகபடியான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதேபோல, 2018ஆம் ஆண்டிலும் பிரதமர் மோடி 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். இருப்பினும், தேர்தல் ஆண்டான 2019-ல் 14 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது. 2020-ஆம் ஆண்டில், உலகின் பெரும்பாலான நாடுகள் கொரொனா காரணமாக தடை விதிக்கப்பட்டு இருந்ததால், பிரதமர் மோடி அந்த கால கட்டத்தில் எந்த நாட்டிற்கும் செல்லவில்லை.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப்பொறுப்புக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில், அக்கட்சி சார்பில் கொண்டாட்ட பாடல் வெளியிடும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 2014ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு நிர்வாகத்தின் செயல்பாடு மாறியுள்ளதாகவும், ஒரு பொறுப்பான அரசு மத்தியில் உள்ளதாகவும் தெரிவித்தார். 8 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் திட்டங்கள் காகித அளவில் மட்டுமே இருந்த நிலையில், பாஜக ஆட்சியில் திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் செயல்படுத்தப்படும் வரை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார்.
TNPSC group 4 VAO exam How to prepare topic wise in Tamil here: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், சிலபஸ் குறித்தும், சிலபஸூக்கு ஏற்றவாறு எவ்வாறு படிப்பது என்பது குறித்தும் இப்போது பார்ப்போம்.
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதனிடையே குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி என்பதால் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வு முறை
குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதனை கட்டாயம் தேர்வர்கள் எழுத வேண்டும். இதில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும். முன்னர் தமிழ் அல்லது ஆங்கில மொழிப்பாடத்தை தேர்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. தற்போது தமிழ் மொழிப்பாடம் மட்டுமே உள்ளது. இதனை தேர்வர்கள் கண்டிப்பாக எழுதி குறைந்தப்பட்ச மதிப்பெண்ணை எடுக்க வேண்டும்.
அடுத்தப்பகுதியாக, பொது அறிவு பகுதியிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான பாடத்திட்டம், பழைய பாடத்திட்டத்தை ஒத்துத்துள்ளது. இருப்பினும், புதிதாக யூனிட் 8 (தமிழ்நாடு மரபு, பண்பாடு, இலக்கியம்) மற்றும் யூனிட் 9 (தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம்) ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே மொத்தம், இந்த எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
மொழிப்பாடம்
முதல் 100 வினாக்கள் தமிழ் மொழி பாட பகுதியிலிருந்து கேட்கப்படும். இதற்கு முன்பு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுகளில், இந்த பகுதி விருப்ப மொழிப் பாட பகுதியாக இருந்தது. அதாவது தேர்வர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் தற்போது தமிழ் மொழித் தேர்வை தகுதி தேர்வாக தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. எனவே தமிழ் மொழிப்பாட பகுதியில் இருந்து மட்டுமே கேள்விகள் இடம்பெறும். இந்த தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த பகுதி வினாக்கள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. அதாவது உங்களுக்கு வேலை கிடைக்காது. இருப்பினும் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், இதனால், தமிழ் மொழிப் பாடப் பகுதியில் 40 சதவீத மதிப்பெண்கள் மட்டும் எடுத்தால் போதும் என்று நினைக்கக் கூடாது. ஏனெனில் தமிழ் மொழிப் பாடப் பகுதி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக உள்ளது. எனவே தமிழ் மொழிப் பாட பகுதி மதிப்பெண்களும் இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே தமிழ் பாடப் பகுதியை எப்போதும் போல் நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் எடுப்பது முக்கியம்.
தமிழ் மொழிப்பாடப்பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
பொது அறிவு
அடுத்தப்படியாக, 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75-பொது அறிவு வினாக்களும், 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். இந்த பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.
தேர்வுக்கு தயாராவது எப்படி?
குரூப் 4 தேர்வுக்கு தயாராக நினைப்பவர்கள் முதலில், புத்தகங்களை சேகரியுங்கள். பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு 6 முதல் 10 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக, ஒவ்வொரு பாடப்புத்தகமாக படித்து முடியுங்கள். முதலில் தமிழ் மொழிப்பாடத்திற்கு படிக்கிறீர்கள் என்றால், 6 ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தை படித்துக் கொள்ளுங்கள். அதில், செய்யுள், உரைநடை, இலக்கணம் என அனைத்து பிரிவுகளையும் தொடர்ச்சியாக படியுங்கள். அடுத்ததாக 7, 8,9,10 வகுப்பு தமிழ் பாடப்புத்தகங்களை இதேபோல் படியுங்கள். முடிந்தவரை செய்யுள் தனியாக, உரைநடை தனியாக, இலக்கணம் தனியாக படிப்பதை தவிருங்கள். ஏனெனில் நீங்கள் பாடப்புத்தகங்களை திருப்பி படிக்கும்போது, தனித்தனியாக படிக்க சிரமமாக இருக்கலாம். மேலும் அந்தந்த பாடங்களுக்கு உரிய இலக்கணப்பகுதிகளை அதோடு, சேர்த்து படித்தால் எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ளலாம்.
செய்யுள் பகுதியை படிக்கும்போது, பாடல்களை ஒருமுறைக்கு இருமுறை படியுங்கள். பின்னர் பாடலின் அர்த்தத்தைப் படித்து தெளிவுபெறுங்கள். கூடவே அந்த பாடலுக்கான இலக்கணப் பகுதியையும் சேர்த்து படித்துக் கொள்ளுங்கள். செய்யுள் படிக்கும்போது, நூற்குறிப்பு, நூலாசிரியர் குறிப்பு, நூலாசிரியர் எழுதிய பிற நூல்கள், காலம் போன்ற அனைத்து தகவல்களையும் படித்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக கணித பாடங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு தலைப்பின் கீழ் வரும் வினாக்களை ஒவ்வொரு நாளாக பயிற்சி செய்து வாருங்கள். கணித பகுதிக்கு ஷார்ட் கட் வைத்து படிப்பது நல்லது. ஆனால், வினாக்களை படிக்காமல், பயிற்சி செய்து பார்ப்பது அவசியம்.
அடுத்ததாக பொது அறிவு பகுதியை பொறுத்தவரை, அறிவியல், வரலாறு, புவியியல், அரசியலமைப்பு உள்ளிட்ட பாடங்களுக்கு பாடப்புத்தகத்தை படிக்கும் போது, பெட்டிச் செய்தி, அடைப்புகுறிக்குள் உள்ள தகவல்கள், ஹைலைட் செய்யப்பட்ட தகவல்களை முக்கியமாக படிக்க வேண்டும். மிக முக்கியமாக பாடங்கள் முடிவில் உள்ள (புக் பேக் கொஸ்டின்) வினாக்களை கண்டிப்பாக படிக்க வேண்டும்.
புவியியல் படிக்கும்போது இந்திய வரைபடத்துடன் இடங்களை பொருத்தி படித்துக் கொண்டால், உங்களுக்கு எப்போதும் மறக்காது. அரசியலமைப்பில், பகுதிகள், அட்டவணைகள், ஆர்டிக்கிள், சட்டத்திருத்தம் ஆகியவற்றில் முக்கியமானவற்றை வரிசையாக படித்து வைத்துக் கொள்ளுங்கள். முன்னதாக ஆங்கிலேயர் கால சட்டங்கள், அரசியலமைப்பு உருவானவிதம் ஆகியவற்றை படித்து தெளிவு பெற்றுங்கள்.
அடுத்தப்படியாக நடப்பு நிகழ்வுகளுக்கு செய்தித்தாள்களை படியுங்கள். செய்தித்தாள்களை படிக்கும்போது தேவையற்ற செய்திகளை படிக்காமல், சிலபஸூக்கு ஏற்றவாறு படியுங்கள்.
குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் பள்ளி பாடப் புத்தகங்களை ஒட்டியே உள்ளதால், பள்ளி புத்தகங்களை முழுமையாக படித்து பயிற்சி பெற்றாலே தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.
பேஸ்புக், ட்விட்டர் உட்பட பல நிறுவன ஊழியர்கள் என்கிற போர்வையில், தனிப்பட்ட நபர்களுக்கு போலியான மெயில்கள் வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த மெயில்கள் உங்கள் தனிப்பட்ட தகவலை பெறும் நோக்கத்திலும், ஆபத்தான வெப்சைட்களுக்கு மாற்றும் லிங்க்-களை கொண்டிருக்கலாம். எனவே, இன்றைய செய்தி தொகுப்பில், போலி மெயில்களை கண்டறியும் டிப்ஸ்களை காணலாம்
மெயிலை ஒப்பன் செய்கையில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்பதை கூகுள் தரப்பில் வீடியோவாகவே வெளியிடப்பட்டுள்ளது. இது, போலி மெயில்களை அடையாளம் காண உதவும்
ட்விட்டர்
ட்விட்டர் நிறுவன மெயில்கள் @twitter.com அல்லது @e.twitter.com ஆகிய இரண்டு டோமைன்கள் வாயிலாகவே வரக்கூடும். இந்த டோபைன் இல்லாமல் வேறு ஐடியில் ட்விட்டர் நிர்வாகி என மெயில் வந்தால், அது போலியானது ஆகும். அந்த மெயிலை உடனடியாக டெலிட் செய்துவிட்டு, அனுப்பிய நபரை பிளாக் செய்துவிடுங்கள். குறிப்பாக, இத்தகைய போலி மெயிலிகளில் வரும் பைல்களை டவுன்லோடு செய்யாதீர்கள்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம்
ட்விட்டரை போலவே, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மெயில்கள் @mail.instagram.com அல்லது @facebookmail.com ஆகிய டோமைன் வாயிலாக தான் வரக்கூடும். இதுதவிர வேறு எதாவது டொமைனிலிருந்து பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் அதிகாரி என யாரெனும் தொடர்பு கொண்டால், அது நிச்சயம் சிக்கல் தான். முடிந்தவரை அந்த மெயிலை ஓபன் செய்யதாதீர்கள். தவறுதலாக திறந்துவிட்டாலும், அதில் வரும் லிங்க்களை கிளிக் செய்யாதீர்கள்
LinkedIn
LinkedIn நிறுவன மெயில்கள் linkedin@e.linkedin.com மற்றும் linkedin@el.linkedin.com ஆகிய இரண்டு டொமைனில் இருந்து மட்டுமே வரக்கூடும். ற்ற டொமைனிலிருந்து வந்தவை போலியாகும். லிங்க்ட்இனில் மோசடி செய்பவர்கள், பணம் கொடுத்தால் வேலை என்கிற போர்வையில் தொடர்புகொள்ள வாய்ப்புள்ளது. உங்களுக்கு செல்போன் அல்லது கணினிக்கு பாதிப்பும் ஏற்படுத்தும் சாப்ட்வேர்களை டவுன்லோடு செய்யவும் அறிவுறுத்தலாம்.
மெயில் கவனிக்க வேண்டியவை
பயனர் பெயர், பாஸ்வேர்டு
சமூக பாதுகாப்பு நம்பர்
வங்கி நம்பர்
PIN நம்பர்
கிரெடிட் கார்டு நம்பர்
குறிப்பு: உங்கள் தாயின் இயற்பெயர் அல்லது அவர்களது பிறந்த நாள் போன்றவை பொது விவரங்கள் கிடையாது. இத்தகைய விவரங்கள் கேட்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவற்றின் மூலம் உங்கள் பாஸ்வேர்ட்டை மாற்றிட முடியும்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக, தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சுமார் 78 நாள்களுக்கு பிறகு, கொரோனா பாதிப்பு 70ஐ தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 77 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 448 ஆக அதிகரித்துள்ளது. மூன்று நாள்களுக்கு முன்பிருந்த நிலைமையுடன் ஒப்பிட்டால், கொரோனா பாதிப்பு 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதிய பாதிப்புகளில் 80 சதவீதம் சென்னை, செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது. இங்கு 347 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், 23 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சென்னையில் புதிய கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதியாக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு 25 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 30 மாவட்டங்களில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்தார்.
TNPSC group 4 VAO exam How to score 95 above in Tamil: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழ் மொழிப்பாடப்பகுதியில் 95 மதிப்பெண்களுக்கு மேலே பெற என்ன செய்ய வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்? என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதனிடையே குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த குரூப் 4 தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண்கள் 160 க்கு மேல் இருந்த நிலையில், இந்த முறையும் கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலே கூறிய கட் ஆஃப் என்பது வினாக்களின் எண்ணிக்கை மற்றும் இது ஓவ்வொரு பிரிவு மற்றும் உட்பிரிவுக்கு ஏற்ப குறைவாகவும், அதிகமாகவும் இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த முறையும் கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், தேர்வர்கள் கடினமாக பயிற்சி செய்ய வேண்டியுள்ளது. தேர்வர்கள் 160 வினாக்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்றால், நிச்சயமாக தமிழ் மொழிப்பாடத்தில் 95 வினாக்களுக்கு மேல் கண்டிப்பாக விடையளிக்க வேண்டும். ஏனெனில் பொது அறிவு பகுதியில் மதிப்பெண்கள் எடுப்பது கடினம். தற்போதைய குரூப் 2 தேர்வில் பொது அறிவில் நிறைய பேர் 60 முதல் 70 மதிப்பெண்களே எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதே நிலையே குரூப் 4 தேர்வுக்கும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், தமிழ் மொழிப்பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்தாக வேண்டும். எனவே தமிழில் 95 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
முன்னதாக, குரூப் 4 தேர்வு குறித்த முக்கிய தகவல்களை தெரிந்துக் கொள்வோம். TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman). இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி என்பதால் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதனை கட்டாயம் தேர்வர்கள் எழுத வேண்டும். இதில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும். முன்னர் தமிழ் அல்லது ஆங்கில மொழிப்பாடத்தை தேர்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. தற்போது தமிழ் மொழிப்பாடம் மட்டுமே உள்ளது. இதனை தேர்வர்கள் கண்டிப்பாக எழுதி குறைந்தப்பட்ச மதிப்பெண்ணை எடுக்க வேண்டும்.
அடுத்தப்பகுதியாக, பொது அறிவு பகுதியிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான பாடத்திட்டம், பழைய பாடத்திட்டத்தை ஒத்துத்துள்ளது. இருப்பினும், புதிதாக யூனிட் 8 (தமிழ்நாடு மரபு, பண்பாடு, இலக்கியம்) மற்றும் யூனிட் 9 (தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம்) ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே மொத்தம், இந்த எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
முதல் 100 வினாக்கள் தமிழ் மொழி பாட பகுதியிலிருந்து கேட்கப்படும். இதற்கு முன்பு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுகளில், இந்த பகுதி விருப்ப மொழிப் பாட பகுதியாக இருந்தது. அதாவது தேர்வர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் தற்போது தமிழ் மொழித் தேர்வை தகுதி தேர்வாக தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. எனவே தமிழ் மொழிப்பாட பகுதியில் இருந்து மட்டுமே கேள்விகள் இடம்பெறும். இந்த தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த பகுதி வினாக்கள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. அதாவது உங்களுக்கு வேலை கிடைக்காது. இருப்பினும் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், இதனால், தமிழ் மொழிப் பாடப் பகுதியில் 40 சதவீத மதிப்பெண்கள் மட்டும் எடுத்தால் போதும் என்று நினைக்கக் கூடாது. ஏனெனில் தமிழ் மொழிப் பாடப் பகுதி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக உள்ளது. எனவே தமிழ் மொழிப் பாட பகுதி மதிப்பெண்களும் இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே தமிழ் பாடப் பகுதியை எப்போதும் போல் நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் எடுப்பது முக்கியம்.
தமிழ் மொழிப்பாடத்தில் 95+ எடுப்பது எப்படி?
தமிழ் மொழிப்பாடப்பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
இதற்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் பாடத்தை படிக்க வேண்டும். பாடத்திட்டத்தை முழுமையாக கவனித்த பின் அதற்கு ஏற்றாற்போல் பாடங்களை படிக்க வேண்டும். குறிப்பாக பாடங்களின் முடிவில் உள்ள (புக் பேக் கொஸ்டின்) வினாக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பாடங்களின் உள்ளே செய்திகளை பொறுத்தவரை பெட்டிச் செய்திகள், அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.
நூல், நூலாசிரியர் தொடர்பாக அதிக வினாக்கள் இடம்பெறுவதால், அதனை நன்றாக படித்துக் கொள்ளுங்கள். செய்யுள் வரிகள் இடம் பெறும் வினாக்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் மனப்பாட செய்யுள் பகுதிகளிலிருந்து கேட்கப்படுவதால், முடிந்த வரை அந்த செய்யுள் பாடல்களை மட்டுமாவது மனப்பாடம் செய்து, அதற்குரிய நூல், நூலாசிரியர் விவரங்களை படித்துக் கொள்ளுங்கள்.
உரைநடைப் பகுதியில், ஹைலைட் செய்யப்பட்ட தகவல்களை நன்றாக படித்துக் கொள்ளுங்கள். அறிவியல் சார்ந்த மற்றும் ஆண்டுகள் குறிப்பிடப்பட்ட வினாக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
அடுத்ததாக இலக்கணம் பகுதியைப் பொறுத்தவரை, புரிந்து படித்துக் கொள்ளுங்கள். பாடப்பகுதியிலிருந்து தான் பெரும்பாலும் வினாக்கள் கேட்கப்படுகிறது என்பதால், இலக்கணப் பகுதியை மனப்பாடம் செய்யாமல், புரிந்து படித்துக் கொள்ளுங்கள். அப்போது தான், பாடப்புத்தகத்திலிருந்து வினாக்கள் கேட்கப்பட்ட நிலையிலும், உங்களுக்கு அதற்கான விடை மறந்திருந்தால், உங்களால் விடையளிக்க முடியும். இலக்கண பகுதியை, தனியாக படிப்பதோடு மட்டுமல்லாமல், ஓவ்வொரு செய்யுள் மற்றும் உரை நடைப் பகுதியை படித்து முடித்தவுடனே படித்துக் கொள்ளுங்கள்.
முடிந்தவரை குறிப்பு எடுத்து படிப்பதும் நல்லது. தற்போது நேரம் குறைவாக இருப்பதால், புத்தகத்தை முழுமையாக படியுங்கள். முடிந்தால் குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, முந்தைய ஆண்டு வினாத்தாள்களை கண்டிப்பாக திருப்பி படியுங்கள். அப்போது உங்களுக்கு வினாக்கள் எப்படி கேட்கப்படுகின்றன என்ற ஐடியா கிடைக்கும். மேலும் அவற்றில் சில கேள்விகள் அல்லது அந்த பகுதி சார்ந்த வினாக்கள் மீண்டும் கேட்கப்படலாம்.
ஒருமுறை அனைத்து புத்தகங்களையும் படித்துவிட்டால், மீண்டும் அதனை திரும்ப படியுங்கள். பாடங்களை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு படித்தால் நிச்சயமாக 95 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கலாம்.
Explained: The Booker Prize, one of the most coveted literary awards in the world: எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீயின் இந்தியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நாவலான டோம்ப் ஆஃப் சாண்ட், சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய மொழி புத்தகம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
2018 ஆம் ஆண்டில் வெளியான ‘ரெட் சமாதி’ என்ற நாவல், டெய்சி ராக்வெல் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு 2021 இல் ‘டோம்ப் ஆஃப் சாண்ட்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
புக்கர் பரிசு அறக்கட்டளையால் ஆண்டுதோறும் வழங்கப்படும் இரண்டு இலக்கிய விருதுகளில் இந்த பரிசும் ஒன்றாகும், அதன் நோக்கம் “பொது நலனுக்காக இலக்கியத்தின் கலை மற்றும் மதிப்பை மேம்படுத்துவது” என்று கூறப்பட்டுள்ளது.
அறக்கட்டளையின் இணையதளத்தில், ”படைப்பு முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் (புக்கர் பரிசு) அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் (சர்வதேச புக்கர் பரிசு), உலகளாவிய அடிப்படையில் புனைகதைகளை கௌரவிக்கும் வகையில் விருதுகள் ஒரே மதிப்பில் வழங்கப்படுகினறன” என குறிப்பிடப்பட்டுள்ளது.
புக்கர் பரிசு என்றால் என்ன?
புக்கர் பரிசு என்பது நாவல்கள் மற்றும் சிறுகதைகளின் தொகுப்புகள் உட்பட ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புனைகதைக்களுக்கு வழங்கப்படும் சிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றாகும். இது முதன்முதலில் 1969 இல் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் நடுவர்கள் குழு அந்த ஆண்டின் சிறந்த படைப்பைத் தீர்மானிக்கிறது. அந்த படைப்பு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் மற்றும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இந்த நீதிபதிகள் குழுவில் புகழ்பெற்ற கலாச்சார வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் நாவலாசிரியர்கள் மற்றும் தொடர்புடைய துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இடம்பெறுவர். இந்த ஆண்டு குழுவில் ஐந்து நீதிபதிகள் இருந்தனர்.
புக்கர் பரிசு பெறும் வெற்றியாளர் £50,000 தொகையைப் பெறுகிறார். முன்னதாக வெளியிடப்படும் நீண்ட பட்டியலில் சுமார் 12 படைப்புகள் இடம்பெறும். தி ‘புக்கர் டசன்’ என்றும் அழைக்கப்படும் இந்த நீண்ட பட்டியல் இந்த ஆண்டின் ஜூலையில் அறிவிக்கப்படும், பின்னர் ஆறு புத்தகங்களின் குறுகிய பட்டியல் செப்டம்பரில் அறிவிக்கப்படும். வெற்றியாளர் நவம்பர் 2022 இல் அறிவிக்கப்படுவார்.
சர்வதேச புக்கர் பரிசு என்பது என்ன?
சர்வதேச புக்கர் பரிசு 2005 இல் தொடங்கி வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் பரிசு, பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகள் உட்பட பல படைப்புகளுக்கு வழங்கப்பட்டது, ஆலிஸ் மன்ரோ, லிடியா டேவிஸ் மற்றும் பிலிப் ரோத் ஆகியோர் ஆரம்பகால வெற்றியாளர்களில் சிலர். 2015 ஆம் ஆண்டில், சர்வதேச புக்கர் பரிசின் விதிகள் அதை வருடாந்திர பரிசாக மாற்றியது. புதிய விதிகள் மற்றொரு மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளில், ஆண்டுதோறும் ஒரு சிறந்த புத்தகத்திற்கு வழங்கப்படும் என குறிப்பிடுகிறது. £50,000 பரிசுத் தொகை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படுகிறது.
இது ஏன் ‘புக்கர்’ என்று அழைக்கப்படுகிறது?
புக்கர் பரிசு, 1969 முதல் 2001 வரை, அதன் ஆரம்ப ஸ்பான்சராக இருந்த பிரிட்டிஷ் உணவு மொத்த விற்பனை ஆபரேட்டரான புக்கர் குரூப் லிமிடெட்டின் பெயரால் பெயரிடப்பட்டு வழங்கப்பட்டது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட முதலீட்டு மேலாண்மை நிறுவனமான மேன் குரூப், 2002 இல் பரிசுக்கு நிதியுதவி செய்யத் தொடங்கியது, இதனால் அது மேன் புக்கர் பரிசு என்று அறியப்பட்டது. மேன் குரூப் அவர்களின் ஸ்பான்சர்ஷிப்பை 2019 இல் முடித்துக்கொண்டது. அதன் பிறகு அமெரிக்க தொண்டு நிறுவனமான கிராங்க்ஸ்டார்ட் ஸ்பான்சராக இருந்து வருகிறது. அதிலிருந்து பரிசுப் பெயர் மீண்டும் ‘புக்கர்’ என மாறிவிட்டது.
சில முக்கிய வெற்றியாளர்கள் யார்?
மார்கரெட் அட்வுட் (‘தி டெஸ்டமென்ட்ஸ்’), யான் மார்டெல் (‘லைஃப் ஆஃப் பை’) மற்றும் ஜூலியன் பார்ன்ஸ் (‘தி சென்ஸ் ஆஃப் எ என்டிங்’) ஆகியோர் விரும்பத்தக்க பரிசின் முக்கிய வெற்றியாளர்களில் அடங்குவர். அருந்ததி ராய் (‘தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’), சல்மான் ருஷ்டி (‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’), கிரண் தேசாய் (’தி இன்ஹெரிட்டன்ஸ் ஆஃப் லாஸ்) மற்றும் அரவிந்த் அடிகா (‘தி ஒயிட் டைகர்’) போன்ற பல இந்திய வம்சாவளி எழுத்தாளர்கள் கடந்த காலங்களில் புக்கர் பரிசை வென்றுள்ளனர். சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்தியராக தற்போது கீதாஞ்சலி ஸ்ரீ உள்ளார்.
கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலங்களில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி அல்லது இழப்புகளைக் குறைத்திடும் வகையில் இல்லம் தேடி கல்வி என்கிற திட்டம் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.
இந்த இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள் சிலர் கோடைகாலத்தில் இயல்பான வகுப்பை தவிர்த்து வாசித்தல்,கதை சொல்லுதல் போன்ற செயல்களை மேற்கொள்ளலாம் என்றும்,இல்லம் தேடி கல்வி மாலை நேரங்களில் செயல்படுவதால் தொடர்ந்து நடத்தலாம் என்றும், மாணவர்களும் இல்லம் தேடி கல்வி வருவதற்கு ஆர்வமாக உள்ளனர் என்றும் அவர்களது ஆர்வத்தை தடுக்க கூடாது என்றும்,விடுமுறை காலங்களில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள் எனவே விளையாட்டு வழி சொல்லித்தரலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதில் ஒரு சில தன்னார்வலர்கள் கோடை விடுமுறை என்பதால் மாணவர்கள் சிலர் வெளியூர் சென்று விடுவார்கள் என்றும் தாங்களும் குடும்பத்துடன் வெளியூர் செல்ல வேண்டும் ,போட்டித் தேர்வுக்கு தயாராக வேண்டும் அதற்காக கோடை கால விடுமுறை வேண்டும் என இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற சிறப்புப் பணி அலுவலரும் விடுமுறை வேண்டும் என நினைக்கும் தன்னார்வலர்கள் மே 14 முதல் மே 31 ஆம் தேதி வரை விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.ஆனால் தன்னார்வலர்கள் விடுமுறையில் செல்லும் நாட்கள் குறித்த விவரத்தினை மையத்தில் பயிலும் மாணவர்களுக்கும் தொடர்புடைய பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆர்வம் உள்ள தன்னார்வலர்கள் தொடர்ந்து இல்லம் தேடி கல்வி மையங்களை நடத்தலாம் என தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கல்வி மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் பரம்பூர் குடியிருப்பு பகுதிக்கு உட்பட்ட மாணவர்களுக்கு பரம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி மையங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று கோடை விடுமுறை இல்லாமல் தொடர்ந்து மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்று வருகிறது.
இதில் தொடக்க நிலை தன்னார்வலர்களாக மு.அனுராதா,ரா. சித்திரா, பா.புனிதவள்ளி ஆகியோரும் உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களாக சத்தியாவதி,ரெ.நதியா ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். தன்னார்வலர்கள் அனைவரும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தங்களை இணைத்து கொண்ட நாள் முதல் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் மாலை நேர வகுப்பு எடுப்பது மட்டுமல்லாமல் மாணவர்களின் நலன் கருதி காலையில் பள்ளிகளுக்கு சென்று பாடம் நடத்தி வருகின்றனர்.
மாலையில் மாணவர்களுக்கு பாடல்கள்,கதைகள்,விளையாட்டுகள், விடுகதைகள் கற்றுத் தருகிறார்கள். இதனால் மாணவர்கள் தங்களது நினைவாற்றல்,படைப்பாற்றல்,சிந்திக்கும் மேம்படுத்துதல் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்கின்றனர். தன்னார்வலர்கள் மாணவர்கள் விரும்பி செய்வதையே செயல்பாடுகளாக மாற்றி எளிய பாடப் பொருள்களாக குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கின்றனர். இதனால் மாணவர்கள் பாடப் பொருளை ஆர்வமுடன் கற்றுக் கொள்கின்றனர்.
மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் நோக்கில் தனித்திறன் கொண்டாட்டம், அறிவியல் மனப்பான்மையை வெளிக்கொணரும் நோக்கில் அறிவியல் கொண்டாட்டம் நடத்துகின்றனர். இதனால் மாணவர்கள் கற்றலில் கொண்டாட்டமாக ஈடுபட்டு வருகின்றனர். தன்னார்வலர்கள் புத்தகப் பூங்கொத்து மூலம் வாசிக்க கற்றுக் கொடுக்கிறார்கள். இதன் மூலம் மாணவர்களும் தங்களது வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொண்டுள்ளனர்.
இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் தாங்களே கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகளை தயார் செய்யும், இல்லம் தேடி கல்வி மையம் மூலம் வழங்கப்பட்ட கற்பித்தல் அட்டைகளை கொண்டும்,பள்ளியில் வழங்கப்பட்டுள்ள கணித உபகரணங்கள், ஆங்கில உபகரணங்கள்,அறிவியல் உபகரணங்களை தலைமையாசிரியரிடம் பெற்று பாடம் நடத்தி வருவதால் மாணவர்கள் ஆர்வமுடன் பாடங்களை கற்று வருகின்றனர்
குழந்தைகளுக்கு நல்ல நண்பர்களாக தன்னார்வலர்கள் விளங்குவதால் அவர்களை அன்போடு அம்மா,அக்கா என்று அழைத்து மகிழ்ச்சியோடு கல்வி கற்று வருகிறார்கள்.பள்ளியின் தலைமையாசிரியர் முருகையாவும் கோடை விடுமுறை காலத்திலும் தினமும் மாலை நேரங்களில் இல்லம் தேடி கல்வி மையத்தை பார்வையிட்டு தன்னார்வலர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கியும், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்து பாராட்டியும் வருகிறார்.
இவ்வாறு பரம்பூர் பள்ளியில் சிறப்பாக செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி மையத்தை இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் முனியசாமி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் சிறப்பாக செயல்பட்டு வரும் தன்னார்வலர்களின் பணியையும்,சிறப்பாக கல்வி கற்று தங்களது கற்றல் இழப்பை ஈடுகட்டிக் கொண்டிருக்கும் மாணவர்களையும் வெகுவாக பாராட்டினார்.
பின்னர் இது குறித்து மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் கு.முனியசாமி கூறியதாவது:
இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத் அவர்களின் வழிகாட்டுதல்படியும்,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதாராமு,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி வழிகாட்டுதல் படியும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதே போல் கோடை விடுமுறையில் செயல்படும் இல்லம் தேடி கல்வி மையங்களில் பணிபுரியும தன்னார்வலர்கள் மாணவர்களை நூலகங்களுக்கு அழைத்துச் சென்று நூல்கள் படிப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறார்கள். மாணவர்களின் வாசித்தல் திறனை அதிகப்படுத்த கூகுள் ரீட் அலாங் செயலி மூலம் மாணவர்களுக்கு வாசிக்க கற்றுக் கொடுக்கிறார்கள்.
எதிர் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட வேண்டிய சிறப்பு முயற்சிகள் குறித்து தொடர்புடைய பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுக்களுடன் இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.
இவ்வாறு கோடைவிடுமுறையிலும் இல்லம் தேடி கல்வி மையங்களில் தன்னார்வலர்கள் பணிபுரிவதால் இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்றார்.
இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் கூறியதாவது: இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததில் மனம் மகிழ்வாக உள்ளது.குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் வேளையில் அவர்களிடம் இருந்தும் பல நல்ல விஷயங்களை கற்றுக் கொள்கிறோம்..ஒரு சில மாணவர்களின் தனித்திறமைகளை காணும் பொழுது வியப்பாகவும் இருக்கிறது.
தற்பொழுது இல்லம் தேடி கல்வி மையங்கள் அனைத்தும் மாணவர்கள் விரும்பி கல்வி கற்க வரும் இடமாக மாறியுள்ளது என்றால் அது மிகையாகாது.