திங்கள், 30 மே, 2022

சென்னையில் புதிய கொரோனா ஹாட்ஸ்பாட்

 

சென்னையில் புதிய கொரோனா ஹாட்ஸ்பாட் 30 5 2022

தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக, தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சுமார் 78 நாள்களுக்கு பிறகு, கொரோனா பாதிப்பு 70ஐ தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 77 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 448 ஆக அதிகரித்துள்ளது. மூன்று நாள்களுக்கு முன்பிருந்த நிலைமையுடன் ஒப்பிட்டால், கொரோனா பாதிப்பு 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

புதிய பாதிப்புகளில் 80 சதவீதம் சென்னை, செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது. இங்கு 347 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், 23 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சென்னையில் புதிய கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதியாக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு 25 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 30 மாவட்டங்களில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-new-covid-cluster-minister-ma-subramanian-460466/