சனி, 14 மே, 2022

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்.. அறிகுறிகள், காரணங்கள், தடுப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

 

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்.. அறிகுறிகள், காரணங்கள், தடுப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

\கேரளாவில் சமீபத்தில் 80 பேருக்கு ‘தக்காளி காய்ச்சல்’ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது தடிப்புகள் அல்லது கொப்புளங்கள், தோல் எரிச்சல் மற்றும் நீரிழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் நோய்.

மாநிலத்தில் அதிகரித்து வரும் பாதிப்புகளை அடுத்து, கோயம்புத்தூர் மற்றும் தமிழகத்திற்குள் நுழையும் பயணிகள் மீது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


தக்காளி காய்ச்சல் கேரளாவின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு அடையாளம் தெரியாத காய்ச்சலாகும். மாநிலத்தில் இதுவரை 5 வயதுக்குட்பட்ட 80க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த அரிய வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

அதன் சிவப்பு நிற கொப்புளங்களால், இதற்கு தக்காளி காய்ச்சல் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக உஜாலா சிக்னஸ் குழும மருத்துவமனைகளின் நிறுவனர் இயக்குனர் டாக்டர் ஷுச்சின் பஜாஜ் கூறினார்.

காரணங்கள்

தற்போது, ​​காய்ச்சலுக்கான சரியான காரணம் ஆராயப்பட்டு வருகிறது. “இந்த நோய் வைரஸ் காய்ச்சலா அல்லது சிக்குன்குனியா அல்லது டெங்கு காய்ச்சலின் பின்விளைவா என்பது குறித்து விவாதம் நடந்து வருகிறது” என்று டாக்டர் பஜாஜ் கூறினார்.

அறிகுறிகள்

சொறி, தோல் எரிச்சல் மற்றும் நீரிழப்பு ஆகியவை மிகவும் பொதுவான அறிகுறிகளில் சில. இந்த “காய்ச்சல் குமட்டல், வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, இருமல், உடல்வலி, தும்மல், மூக்கு ஒழுகுதல், சோர்வு மற்றும் மூட்டுகளில் வலி போன்றவற்றையும் ஏற்படுத்தியிருக்கிறது” என்று சில அறிக்கைகள் கூறுகின்றன.

தடுப்பு மற்றும் சிகிச்சை

டாக்டர் பஜாஜ் படி, நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய தக்காளி காய்ச்சல் தொடர்பான சில குறிப்புகள் இங்கே உள்ளன.

* காய்ச்சலால் ஏற்படும் கொப்புளங்கள் இன்னும் மோசமாகிவிடும் என்பதால் குழந்தைகள் கொப்புளங்களை சொறிவதைத் தடுக்கவும்.

* சரியான ஓய்வு மற்றும் சுகாதாரத்தையும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நீரிழப்பை எதிர்கொள்ள திரவ உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும்.

*அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் பெற்றோர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

* மற்ற வகை காய்ச்சலைப் போலவே, தக்காளி காய்ச்சலும் பரவக்கூடியது. எனவே யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.

source https://tamil.indianexpress.com/lifestyle/kerala-recently-reported-tomato-flu-know-about-symptoms-causes-prevention-453217/