க.சண்முகவடிவேல்
star symbol in rupee note Tamil News:
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நூலகத்தில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத்தின் சார்பில் இந்திய ரிசர்வ் வங்கி நட்சத்திர வரிசை ரூபாய் பணத்தாள்கள் குறித்த சிறப்பு சோற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இந்திய ரிசர்வ் வங்கி நட்சத்திர வரிசை ரூபாய் பணத்தாள்கள் குறித்து திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவன தலைவரும், சமூக ஆர்வலருமான விஜயகுமார், நாணயவியல் மற்றும் பணத்தாள்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் ஆகியோர் இந்திய ரிசர்வ் வங்கி நட்சத்திர வரிசை ரூபாய் பணத்தாள்கள் குறித்து தெரிவித்ததாவது;
இந்திய ரிசர்வ் வங்கி நட்சத்திர வரிசை ரூபாய் பணத்தாள்களை வழக்கமான பணத்தாள்களில் பிழை மற்றும் குறைபாடு ஏற்படின் அதே எண்ணில் நட்சத்திர வரிசையுடன் வெளியிடப்படும். இவை வழக்கமான ரூபாய் பணத்தாள்களைப் போலவே இருக்கும். ஆனால் வரிசை எண்ணுக்கு முன்பு நட்சத்திரக் குறியீடு இருக்கும். அதாவது ஒரு 20 ரூபாய் நோட்டை எடுத்துக்கொள்வோம். அந்த ரூபாய் நோட்டில் பிழை ஏற்பட்டிருப்பின், அந்த ரூபாய் நோட்டின் எண் பேனலில் கூடுதல் எழுத்து, அதாவது பணத்தாள் தொடரில் உள்ள அதே எண்ணுக்கு முன்பு ஒரு நட்சத்திர குறியீடு பதிக்கப்பட்டிருக்கும்.
வழக்கமான ரூபாய் நோட்டில் எண் வரிசைகள் வழக்கம்போல் இருக்கும் அதே நேரம் ரூபாய் நோட்டில் ஏதாவது ஒரு பிழை ஏற்பட்டிருப்பின் அந்த நோட்டில் வழக்கமான எண் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும் அந்த சீரியல் முன்பு ஓர் நட்சத்திரக் குறியீடுடன் வரிசை என் இருக்கும். இந்த நட்சத்திர தொடர் எண்ணைக் கொண்ட ரூபாய் பணத்தாள்களை பலரும் ஏதோ கள்ள நோட்டு மாதிரி பார்க்கும் நிலை சிலரிடம் ஏற்பட்டிருக்கின்றது.
இந்த ரூபாய் நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டவை என்பதால் இதை சட்டப்பூர்வமாக பொதுமக்கள் பயன்படுத்தலாம். இதுகுறித்து பொதுமக்கள் எந்த அச்சமும் படத்தேவையில்லை என்றனர். முன்னதாக செயலர் குணசேகரன் வரவேற்க, கமலக்கண்ணன் நன்றி கூறினார்.
source https://tamil.indianexpress.com/business/no-need-to-worry-about-star-symbol-in-rupee-note-454529/