அண்ணா பல்கலை. கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறுகிறதா? பாதிப்பு அதிகரிப்பு 26 5 2022
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், தினசரி கொரோனா பாதிப்பு பதிவான வண்ணமே உள்ளது. மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பரிசோதனை நடத்தப்படுகிறது.
மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை தினசரி கொரோனா பாதிப்பு 59 பேருக்கு உறுதியான நிலையில், நேற்று புதன்கிழமை 56 ஆக குறைந்தது.
இதற்கிடையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பல்கலைக்கழகத்தில் இதுவரை 160 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 11 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரல் பரவல் இன்னும் இருக்கிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தாமதிப்பது, வைரல் பாதிப்பு பலருக்கு ஏற்பட வழிவகுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர் என கூறினார்.
NIE துணை இயக்குனர் டாக்டர் பிரப்தீப் கவுர் கூறுகையில், பல நாடுகள் 5ஆம் கட்ட தடுப்பூசியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முதல் தவணை தடுப்பூசியே செலுத்திக்கொள்ளவில்லை. பூஸ்டர் உட்பட தடுப்பூசி டோஸ்கள் முதியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களிடையை செலுத்தியதன் காரணமாக, மருத்துவமனையில் அனுமதித்தல் எண்ணிக்கை, இறப்பு எண்எணிக்கை குறைந்துள்ளது என்றார்.
பொது சுகாதார இயக்குனர் டாக்டர் டி எஸ் செல்வவிநாயகம் கூறுகையில், மாநிலம் கொரோனா பரவலை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருப்பது, தொற்று பாதிப்பை அதிகரிக்கிறது. ஏப்ரல் மாதத்தில் ஐஐடியில் 230 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதைதொடர்ந்து, ஸ்ரீ சத்ய சாய் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 75 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது என்றார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/anna-university-corona-case-increased-day-by-day-458875/