டாக்டர் நூர்ஜஹான்:-
இன்று IPF பெங்களூர் மண்டலம் SSC (Staff Selection Commission) தேர்வுகள் (பணியாளர் தேர்வு வாரியம் தேர்வுகள்) பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
அல்ஹம்துலில்லாஹ்,
இதில் சில அனுபவம் கிடைத்தது.
இத்தேர்வைப் பற்றி முஸ்லிம் சமூகம் அதிகம் அறிந்திருக்கவில்லை, மேலும் இந்த அமர்வில் நான் கலந்து கொள்ளும் வரை மத்திய அரசு அதன் முக்கியப் பணியிடங்களை எவ்வாறு ஆட்சேர்ப்பு செய்கிறது என்பது பற்றி எனக்குத் தெரியாது.
SSC இல் 6 மாத கடுமையான பயிற்சி,
இந்த சமூகத்தின் தலைவிதியை மாற்றும்.
இன்ஷாஅல்லாஹ்
சிபிஐ, என்ஐஏ, வருமான வரி, அமலாக்க இயக்குநரகம் (இடி), ஆர்பிஐ, சிஏஜி போன்றவற்றில் பெரும்பாலான காலியிடங்கள் SSC எஸ்எஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
மேலும் SSC எஸ்எஸ்சி டெல்லி போலீஸ் போன்ற காலியிடங்களுக்கு அவ்வப்போது பல தேர்வுகளை நடத்துகிறது.
"ஆனால், துரதிஷ்டவசமாக முஸ்லிம் சமூகத்திற்கு இந்தத் தேர்வுகள் பற்றியோ அதன் அமைப்பு பற்றியோ விழிப்புணர்வு இல்லை".
"எஸ்எஸ்சி தேர்வுத் தயாரிப்பு பற்றி முஸ்லிம் இளைஞர்கள் யாரும் பேசுவதை இதுவரை நான் பார்க்கவில்லை".
ஒவ்வொரு ஆண்டும் 12000 - 17000 மத்திய அரசுப் பணியிடங்கள் SSC CGL தேர்வின் மூலம் மட்டுமே நிரப்பப்படுகின்றன.
மேலும் பல வேலைகளுக்கான தேர்வுகளும் இதன் மூலம் நடைபெறுகிறது.
இப்போது தான் பல முஸ்லீம் பட்டதாரி இளைஞர்கள் UPSC தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். ஆனால், UPSC ஒவ்வொரு ஆண்டும் 800 முதல் 1000 பதவிகளை மட்டுமே வழங்குகிறது. இதன் தேர்வு முறை மிகவும் கடினமானது மற்றும் பாடத்திட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.
ஆனால், SSC முறை நிலையானது.
தொகுப்பாளரின் கூற்றுப்படி, இது SSC தேர்வின் மற்றொரு நன்மை.
ஆங்கிலம், கணிதம், பொது அறிவு ஆகியவற்றில் சிறிது கவனம் செலுத்தத் தயாராக இருக்கும் முஸ்லீம் பட்டதாரி மாணவர்கள் இந்த தேர்வில் எளிதாக தேர்ச்சி பெறலாம்.
"90% முஸ்லிம் அமைப்புகளும் அதன் தலைவர்களும் சமூகத்தின் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கிறார்கள்,
9% பேர் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகள் பற்றி விவாதிக்கிறார்கள் மற்றும் 1% தீர்வுகளில் வேலை செய்கிறார்கள்,
(நீங்கள் தீர்வுகளில் கவனம் செலுத்தும்) அந்த 1% ஆக இருக்க முயற்சி செய்யுங்கள்.
உண்மையில் முஸ்லிம் சமூகத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால நிலைமையை மாற்ற வேண்டும்".
தயவுசெய்து இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை சமூக வலைதளங்களில் அதிகமதிகம் பகிரவும்.
குறிப்பிட்ட உயர்ஜாதியினர்கள் மட்டும் பயன்பெறும் (ஆதிக்கம் செலுத்தும்) இப்படிப்பட்ட வேலைவாய்ப்புகள், அனைத்து சமுதாய வேலையில்லாதவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
சமுதாய நலன் கருதி
படித்ததை பகிர்வதோடு விட்டுவிடாமல்.
முஸ்லீம் சமுதாய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையிலும் முயற்சிகள் செய்வோம்.
ஜமாஅத்களும், அமைப்புகளும், இயக்கங்களும் முஸ்லிம் சமுதாய மாணவர் மற்றும் இளைஞர்களின் தொடர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்த தொடங்கட்டும்.
இன்ஷாஅல்லாஹ்.