வியாழன், 19 மே, 2022

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்துடன் இ-ஷ்ரம் போர்ட்டலை ஒருங்கிணைக்கும் பணி

 ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்துடன் இ-ஷ்ரம் போர்ட்டலை ஒருங்கிணைக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இ-ஷ்ரமின் வாக்குறுதி குறித்து IE THINC மைக்ரேஷன் வெபினாரில் மத்திய அமைச்சர் யாதவ்  கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  பொது விநியோக கடைகளில் இருந்து மாதாந்திர உணவு தானிய சேகரிப்பின் இருப்பிடத் தரவுகளின் அடிப்படையில், “ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டுடன் இ-ஷ்ரமை ஒருங்கிணைக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

இ-ஷ்ரமில் உள்ள நிரந்தர முகவரித் தரவுகளுடன், இருப்பிடத் தரவை ஒப்பிடுவது, இ-ஷ்ரமில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அடையாளம் காண உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலாளியின் இருப்பிடம்’ சமூக பாதுகாப்பு நலன்களை அணுகுவதற்கு ஒரு தடையாக இல்லை என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம். E-Shram அனைத்து தொடர்புடைய தரவுகளையும் மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளும்,” என்று பூபேந்தர் பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய, ஆஜீவிகா பீரோவின் இடம்பெயர்வு மற்றும் தொழிலாளர் தீர்வுகளுக்கான மையத்தின் திட்ட மேலாளர் திவ்யா வர்மா, இ-ஷ்ரம் பயிற்சி அதன் முன்னோடிகளிலிருந்து எவ்வாறு வேறுபடும் என்பது உண்மையில் தெளிவாக இல்லை.

“அமைப்புசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பு வாரியம் 2008 இல் தொடங்கப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளர் அடையாள எண் 2015 இல் தொடங்கப்பட்டது. மேலும், இந்தத் திட்டங்கள் மற்றும் அட்டைகள் மற்றும் இயங்குதளங்கள் அனைத்தும், முறைசாரா மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கணக்கிடுவது ஆகிய ஒரே விஷயத்தைத் தேடுகின்றன…

ஆனால், இத்தகைய நடவடிக்கையால் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு என்ற பெயரில் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் இ-ஷ்ரமின் அணுகலில், டிஜிட்டல் டிவைட் மற்றும் அதன் பலன்கள் பற்றிய போதிய தகவல் இல்லாததை பற்றி திவ்யா பேசினார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மிகப்பெரிய முதலாளியாக தனியார் துறை உள்ளது, அவர்களின் பங்களிப்பு நீண்ட தூரத்துக்கு எடுத்து செல்லும்,” என்று இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இந்திய அலுவலகத் தலைவர் சஞ்சய் அவஸ்தி கூறினார்.

ஜான் சஹாஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிப் ஷேக் கூறுகையில், “இ-ஷ்ரம் அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பதிவேட்டை உருவாக்க முயற்சிக்கிறது. பதிவு செய்வது முதல் படி, அதன் பிறகு பாதுகாப்பின் மூலம் பாதிப்பை எவ்வாறு குறைப்பது என்பது மிகவும் முக்கியம். இதில் தொழில்துறையின் பங்கு முக்கியமானது மற்றும் அவர்களின் பங்கேற்பு அதிகரிக்கப்பட வேண்டும்.

கோவிந்தராஜ் எத்திராஜ், பத்திரிகையாளர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் நிறுவனர், தேர்தல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக தேர்தல் தரவுத்தளத்தை இ-ஷ்ரமுடன் இணைக்கும் சாத்தியம் குறித்தும் பேசினார். “வாக்களிப்பதை ஏன் அறிமுகப்படுத்தக்கூடாது? தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில், நம்மை தடுக்க எதுவும் இல்லை, ”என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/food/how-to-make-ribbon-pakoda-with-idli-batter-simple-recipe-in-tamil-455499/