வியாழன், 12 மே, 2022

பெண்கள் இதை அதிகம் குடித்தால் ஆபத்து; ஏன் தெரியுமா?

 

பெண்கள் இதை அதிகம் குடித்தால் ஆபத்து; ஏன் தெரியுமா?

எடையைக் குறைக்க வேண்டும் என தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸ் குடிக்கத் தொடங்கிவிட்டீர்களா? எலுமிச்சை ஜூஸ் செரிமானத்தை அதிகரித்து எடையை குறைக்கும். இது சருமத்திற்கு நன்மை அளிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், எலுமிச்சை ஜூஸ் அதிகமாக குடித்தால் உண்மையில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. என்ன ஆபத்து என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

பலரும் தங்கள் எடையைக் குறைக்க தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸ் குடிக்கின்றனர். ஆனால், இந்த எலுமிச்சை ஜூஸ் அதிகம் குடித்தால் பங்க விளைவுகள் ஏற்படும். குறிப்பாக பெண்கள் இதை அதிகம் குடித்தால் ஆபத்து உள்ளது.

எலுமிச்சை ஜூஸ் சுவையைத் தருவதோடு, அதில், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் மற்றும் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. அதைவிட அதில, அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. உடலில் உள்ள அனைத்து திசுக்களின் வளர்ச்சி, புதுப்பித்தலுக்கு தேவையான எலுமிச்சை ஜூஸில் உள்ள வைட்டமின் சி முக்கிய காரணியாக உள்ளது. எலுமிச்சை ஜூஸில் நன்மை உள்ளது என்பதற்காக குடிப்பதற்கு முன்னால், கொஞ்சம் யோசியுங்கள். எலுமிச்சை ஜூசைக் அதிகமாக குடிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

எலுமிச்சை ஜூஸ் அதிகமாகக் குடித்தால் எப்படி ஆபத்து ஏற்படும்?

ஒரு உணவு நல்லது என்று கூறினால், அதற்காக அந்த உணவை அதிக அளவில் சாப்பிட வேண்டும் என்று அர்த்தமல்ல. அதைத்தான், தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” என்ற பழமொழி உள்ளது.

“எலுமிச்சை ஜூஸ் குடித்தால் எடை குறையும், நீரிழிவைத் தடுக்கும், அஜீரணத்தைப் போக்கும் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால், அதிகமாக எலுமிச்சை ஜூஸ் குடித்தால் ஆபத்தை விளைவிக்கும்” என்று மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் கூறுகிறார்கள்.

எலுமிச்சை ஜூஸ் அதிகமாக குடித்தால் ஏற்படும் 5 பக்க விளைவுகள்

  1. இது பல்லின் எனாமலை அரிக்கும் அல்லது பல் சிதைவை ஏற்படுத்தும்

எலுமிச்சை அதிக அமிலத்தன்மை கொண்ட சிட்ரஸ் பழங்கள் ஆகும். ஒருவர் எலுமிச்சை சாற்றை அடிக்கடி மற்றும் அதிகமாக உட்கொண்டால், எலுமிச்சையின் அமிலத்தன்மையின் காரணமாக, பல் கூச்சம் ஏற்பட்டு பல் சிதைவு ஏற்படும். பற்களில் எலுமிச்சை சாறு நேரடியாகப் படுவதைத் தவிர்க்க ஸ்ட்ராக்களைப் பயன்படுத்தலாம். எலுமிச்சை ஜூசை குடித்த பிறகு, பல் துலக்குவதைத் தவிர்க்க வேண்டும். எலுமிச்சை ஜூஸுடன் நிறைய தண்ணீர் குடிப்பது பல் சிதைவைத் தடுக்கும்.

  1. தலைவலியை ஏற்படுத்தும் எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள் பெரும்பாலும் ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். எலுமிச்சையில் டைரமைன் என்ற இயற்கையான மோனோஅமைன் உற்பத்தி செய்வதால் இது அடிக்கடி தலைவலியை உண்டாக்கும். நீங்கள் தீவிர தலைவலியை அனுபவிப்பவராக இருந்தால், எலுமிச்சை ஜூஸ் குடிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள். உறுதி செய்யப்பட்ட ஆய்வுகள் இல்லை என்றாலும், சிட்ரஸ் பழங்கள் ஒற்றைத் தலைவலிக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதைக் காட்டுகின்றன.

  1. அதிக அளவில் எலுமிச்சை ஜூஸ் குடிப்பது வயிற்றுப் பிரச்சனைகளையும் நெஞ்செரிச்சலையும் அதிகரிக்கும்

சிட்ரஸ் பழங்களை அதிகமாக உட்கொள்பவர்கள் பெரும்பாலும் இரைப்பை குடல் பிரச்சினைகள், நெஞ்செரிச்சல், அமில வீச்சு, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், எலுமிச்சை ஜூஸ் குடிப்பதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும். இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) உள்ளவர்கள் எலுமிச்சை ஜூஸ் அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

  1. வாயில் சதை வளர்ச்சி புண்களை மோசமாக்கும்

இது வாயில் சதை வளர்ச்சியால் ஏற்படும் புண்கள் அல்லது தொற்று இல்லாத வாய் புண்கள், வலி, வாயில் உருவாகும் சிறிய புண்கள். சிட்ரஸ் பழங்கள் வாய் புண்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. எலுமிச்சை சாறு குடிப்பதற்கு முன் வாய் புண்கள் முழுமையாக குணமாகும் வரை காத்திருப்பது நல்லது.

  1. எலுமிச்சை தோலுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகளுக்கு ஊக்கியாக செயல்படுகிறது

உணவகங்கள் பெரும்பாலும் எலுமிச்சை சார்ந்த பானங்களில் எலுமிச்சை பழத்தை மேலே வைக்கின்றன. இருப்பினும், பல்வேறு ஆய்வுகள் எலுமிச்சையில் ஆபத்தான நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் இருப்பதாக நிரூபிக்கின்றன. ஆபத்துகளைக் குறைக்க, உங்கள் பானத்தில் எலுமிச்சைத் தோல்களைச் சேர்ப்பதற்குப் பதிலாக எலுமிச்சையைப் பிழிந்து சாப்பிடுவது நல்லது.

அதனால், எலுமிச்சை ஜூஸ் குடித்தால் நல்லது என்று அளவுக்கு அதிகமாக குடித்து பக்கவிளைவுகளுக்கு ஆளாகாதீர்கள். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

source https://tamil.indianexpress.com/lifestyle/lemon-water-too-much-drinking-ladies-can-be-harmful-side-effects-452735/