19 5 2022
கடல்வழியாக சரக்குகளை இறக்குமதி செய்பவர்களுக்கு ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி) விதிக்கும் மத்திய அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விவகாரங்களில் சட்டம் இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் உண்டு என்றும், ஜிஎஸ்டி கவுன்சிலின் அனைத்துப் பரிந்துரைகளும் மாநிலங்களைக் கட்டுப்படுத்தாது. ஆனால் பரிந்துரைகளை வற்புறுத்தும் மதிப்பை மட்டுமே கொண்டவை என்றும் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கூறியது.
உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, வரிவிதிப்பு விவகாரம் குறித்து மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் சட்டங்களை இயற்றும் அதிகாரம் உள்ளது என்று குறிப்பிட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் இணக்கமாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றம் வலியுறுத்தியது.
குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவில் வந்துள்ள இந்த தீர்ப்பு கூட்டாட்சியின் அம்சங்களைப் பற்றி கூறியுள்ளது. “இந்திய கூட்டாட்சி, கூட்டுறவு மற்றும் கூட்டுறவு அல்லாத கூட்டாட்சி முறைக்கு இடையேயான ஒரு உரையாடல், அதில் மாநிலங்களும் மத்திய அரசும் எப்போதும் உரையாடலில் ஈடுபடுகின்றன” என்று கூறியுள்ளது.
கடல் வழியாக சரக்குகளை இறக்குமதி செய்பவர்களுக்கு ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி) விதிக்கும் மத்திய அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
source https://tamil.indianexpress.com/food/tamil-recipe-how-to-make-gulab-jamun-in-idli-batter-455953/