தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 இல், ஒரு பெண்ணுக்கு 2.2 குழந்தைகள் என்று இருந்த நிலையில், தேசிய குடும்ப சுகாதார சர்வே 5 இல், நாட்டின் ஒட்டுமொத்த கருத்தரித்தல் விகிதம், ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் கீழே குறைந்துள்ளது.
தேசிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நடத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களில், முஸ்லிம்களின் கருத்தரித்தல் விகித கடந்த இருபதாண்டுகளாக பெரிய அளவில் சரிவைக் கண்டுள்ளது.
பல ஆண்டுகளாகக் காணப்படும் குறைந்துவரும் போக்கிற்கு ஏற்பா, முஸ்லிம் சமூகத்தின் கருத்தரித்தல் விகிதம் 2015-16 இல் 2.6 ஆக இருந்து 2019-2021 இல் 2.3 ஆகக் குறைந்துள்ளது. அனைத்து மத சமூகங்களும் கருத்தரித்தலில் சரிவைக் காட்டி, நாட்டின் மொத்த கருத்தரித்தல் விகிதத்தில் சரிவுக்கு பங்களிப்பு செய்தாலும், முஸ்லிம் சமூகத்தில் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 1 தகவல்படி, (1992-93) இல் 4.4 லிருந்து தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5 தகவல்படி (2019- 2021- இல்) 2.3 ஆக வீழ்ச்சி கடுமையாக உள்ளது.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5 இல், நாட்டின் ஒட்டுமொத்த கருத்தரித்தல் ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகளுக்கு பதிலாக, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 தகவல்படி, 2.2 நிலையில் இருந்து கீழே சரிந்துள்ளது.
இருப்பினும், அனைத்து மத சமூகங்களுக்கிடையில், முஸ்லிம் சமூகத்தின் கருத்தரித்தல் விகிதம் மிக அதிகமாக உள்ளது. இந்து சமூகம் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5 இல் 1.94 ஆக உள்ளது. இது 2015-16 இல் 2.1 ஆக இருந்தது. இந்து சமூகம் 1992-93 இல் கருத்தரித்தல் விகிதம் 3.3 ஆக இருந்தது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5 இல், கிரிஸ்துவ சமூகம் 1.88, சீக்கிய சமூகம் 1.61, ஜெயின் சமூகம் 1.6 மற்றும் பௌத்த மற்றும் நவ-பௌத்த சமூகம் 1.39 என கருத்தரித்தல் விகிதத்தில் நாட்டிலேயே குறைந்த விகிதத்தைக் கொண்டுள்ளது என்று கண்டறிந்துள்ளது.
1992-93 மற்றும் 1998-99 மற்றும் 2005-2006 மற்றும் 2015-16 க்கு இடையில் 0.8 புள்ளிகள் குறைந்த போது – முஸ்லிம்களின் கருத்தரித்தல் விகிதத்தில் இரண்டு முறை வேகமான சரிவு ஏற்பட்டுள்ளது.
“இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில், கருத்தரித்தலில் உள்ள இடைவெளி குறைந்து வருகிறது. கல்வியறிவு, வேலைவாய்ப்பு, வருமானம் மற்றும் சுகாதார சேவைகளுக்கான அணுகல் போன்ற மத சார்பற்ற காரணிகளின் விளைவாக அதிக கருத்தரித்தல் ஏற்படுகிறது. இரண்டு சமூகங்களுக்கிடையிலான தற்போதைய இடைவெளி முஸ்லிம்களின் இந்த அளவு பாதகமாக இருக்கிறது. கடந்த சில பத்தண்டுகளாக வளர்ந்து வரும் முஸ்லிம் நடுத்தர வர்க்கப் பெண்கள் கல்வி மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டின் மதிப்பை உணர்ந்து வருகிறார்கள்” என்று இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர், மற்றும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பூனம் முத்ரேஜா.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 iல் (2015-16) 32 சதவீதமாக இருந்த பள்ளிப்படிப்பு இல்லாத முஸ்லிம் பெண்களின் சதவீதம் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5 இல் (2019-21) 21.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. மாறாக, இந்துக்களைப் பொறுத்தவரை, இது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 இல் 31.4 சதவீதத்தில் இருந்து தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5 இல் 28.5 சதவீதமாக சிறிய மாற்றத்தைக் கண்டுள்ளது.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5 அறிக்கப்படி, பெண்களின் பள்ளிப்படிப்புடன் ஒரு பெண்ணுக்கு குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பள்ளிப்படிப்பு இல்லாத பெண்களுக்கு சராசரியாக 2.8 குழந்தைகள் உள்ளனர். 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட பள்ளிப்படிப்பைக் கொண்ட பெண்களுக்கு 1.8 குழந்தைகள் உள்ளனர். மிகக் குறைந்த செல்வச் செழிப்பில் உள்ள பெண்களுக்கு சராசரியாக 1.0 குழந்தைகள் அதிகமாக உள்ளனர். மேலும், பொருளாதார முன்னேற்றம் இயற்கையான முறையில் குறைவான கருத்தரித்தல் விகிதங்களுக்கு வழிவகுக்கிறது என்று இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
“முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாடு குறித்து அதிக அளவில் விழிப்புணர்வைக் கொண்டுள்ளனர் என்பதையும் இந்த தரவு காட்டுகிறது. முஸ்லிம்களிடையே நவீன கருத்தடை பயன்பாடு தேசிய குடும்ப சுகாதர கணக்கெடுப்பு 4 இல் 37.9 சதவீதத்தில் இருந்து தேசிய குடும்ப சுகாதர கணக்கெடுப்பு 5 இல் 47.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்துக்களை விட அதிகரிப்பின் அளவு அதிகமாக உள்ளது” என்கிறார் முத்ரேஜா.
முஸ்லிம்கள் கருத்தடைக்கான நவீன இடைவெளி முறைகளை அதிகளவில் ஏற்றுக்கொண்டுள்ளனர்— தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 இல், 17 சதவீதத்திலிருந்து தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5 இல் 25.5 வரை அதிகரித்துள்ளது. இவர்கள், சீக்கியர்கள் (27.3 சதவீதம்) மற்றும் ஜெயின்கள் (26.3 சதவீதம்) ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளனர். இடைவெளி என்பது கர்ப்பத்திற்குப் பிறகு ஒரு பெண் எவ்வளவு விரைவில் மீண்டும் பிரசவிப்பதைக் குறிக்கிறது.
“முஸ்லிம் ஆண்களில் அதிக அளவு சதவீதத்தினர் குடும்பக் கட்டுப்பாடு குறித்த சிறந்த அணுகுமுறையைக் காட்டியுள்ளனர். முஸ்லீம் ஆண்களில் சுமார் 32 சதவீதம் பேர் கருத்தடை என்பது பெண்களின் வேலை என்று நினைக்கிறார்கள். அதைப் பற்றி ஆண்கள் கவலைப்படக்கூடாது. இந்த எண்ணிக்கை இந்துக்களில் 36 சதவீதத்துக்கு மேல் அதிகமாக உள்ளது. – தேசிய குடும்ப சுகாதார கணகெடுப்பு 5 இன் படி, கருத்தடை மாத்திரைகளின் பயன்பாடு முஸ்லீம்களிடையே அதிகமாக உள்ளது. அதே சமயம் சீக்கியர்கள் மற்றும் ஜைனர்களுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்களிடையே ஆணுறைகளின் பயன்பாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. எனவே, குடும்பக் கட்டுப்பாட்டை சமூகம் ஏற்றுக்கொள்வதை அங்கீகரிப்பதும், குடும்பக் கட்டுப்பாட்டுக்கு இஸ்லாம் எந்த வகையிலும் தடையாக இல்லை என்பதை ஒப்புக்கொள்வதும் முக்கியம்.
இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷில் உள்ள முஸ்லிம் மக்கள் தங்கள் பொது சுகாதார அமைப்புகளில் அதிக எண்ணிக்கையிலான இடைவெளி முறைகள் காரணமாக குறைந்த கருத்தரித்தலைக் கண்டுள்ளனர். இந்தியா இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும். கருத்தடைத் தேர்வுகளின் வாய்ப்பை விரிவுபடுத்த வேண்டும். இந்தியாவின் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் கருத்தடை சாதனங்களையும் சேர்க்க வேண்டும்” என்று முத்ரேஜா கூறினார்.
கிராமப்புறங்களில் மொத்த கருவுறுதல் விகிதம் 1992-93 இல் ஒரு பெண்ணுக்கு 3.7 குழந்தைகளாக இருந்து 2019-21 இல் 2.1 குழந்தைகளாக குறைந்துள்ளது. 1992-93 இல் 2.7 குழந்தைகளாக இருந்த நகர்ப்புற பெண்களின் எண்ணிக்கை 2019-21 இல் 1.6 குழந்தைகளாக குறைந்துள்ளது. அனைத்து தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்புகளின் பதிப்புகளிலும், வசிக்கும் இடத்தைப் பொருட்படுத்தாமல், கருத்தரித்தல் விகிதம் 20-24 வயதில் உச்சத்தை அடைகிறது. அதன் பிறகு அது சீராக குறைகிறது.
source https://tamil.indianexpress.com/india/total-fertility-rate-dips-sharpest-decline-among-muslims-nfhs-5-data-451645/