புதன், 25 மே, 2022

ரூ.31,400 கோடி; சென்னையில் -திட்டங்கள் இவைதான்!

 மே 26 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி ரூ. 31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் மற்றும் நாட்டுக்கு அர்பணிக்கிறார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடி 26 மே 2022 அன்று ஹைதராபாத் மற்றும் சென்னைக்கு வருகை தருகிறார். பிற்பகல் சுமார் 2 மணியளவில், ஐஎஸ்பி (இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்) ஹைதராபாத்-ன் 20 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பார் மற்றும் 2022 ஆம் ஆண்டின் முதுகலை திட்ட (பிஜிபி) வகுப்பின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுவார். மாலை சுமார் 5:45 மணியளவில், சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் 31,400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் மற்றும் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

உள்கட்டமைப்பு மேம்பாடு, இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிராந்தியத்தில் எளிதாக வாழ்வதற்கு உத்வேகம் அளிக்கும் வகையில், பிரதமர் தேசத்திற்கு அர்ப்பணித்து, சென்னையில் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். இந்த திட்டங்கள் பிராந்தியத்தில் சமூக-பொருளாதார செழிப்பை கணிசமாக மேம்படுத்தவும், பல துறைகளில் மாற்றத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவும் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்.

சென்னையில் 2900 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ஒன்று ரூ. 500 கோடி திட்ட மதிப்பீட்டிலான 75 கிமீ நீளமுள்ள மதுரை-தேனி ரயில் பாதை திட்டம். இது அந்த பிராந்தியத்தில் பயணத்தை எளிதாக்கும் மற்றும் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும்.

இரண்டாவது ரூ. 590 கோடி திட்ட மதிப்பீட்டிலான தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 30 கி.மீ., நீளமுள்ள மூன்றாவது ரயில் பாதை திட்டம். இது கூடுதல் புறநகர் ரயில் சேவைகளை இயக்குவதற்கு வசதியாக இருக்கும் மற்றும் பயணிகளுக்கு வசதியை அதிகரிக்கும்

அடுத்ததாக 115 கிமீ நீளமுள்ள எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவு மற்றும் 271 கிமீ நீளமுள்ள திருவள்ளூர்-பெங்களூரு பகுதி ETBPNMT இயற்கை எரிவாயு குழாய் ஆகியவை முறையே சுமார் ரூ. 850 கோடி மற்றும் 910 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நுகர்வோர் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை எளிதாக்கும்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புற திட்டத்தின் கீழ் ரூ. 116 கோடி செலவில், சென்னை லைட் ஹவுஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட 1152 வீடுகளின் திறப்பு விழா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மேலும் 28,500 கோடி செலவில் கட்டப்படும் ஆறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

262 கிமீ நீளமுள்ள பெங்களூரு – சென்னை விரைவுச் சாலை ரூ. 14,870 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. இது கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை கடந்து செல்லும் மற்றும் பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான பயண நேரத்தை 2-3 மணிநேரம் குறைக்க உதவும். சென்னை துறைமுகத்தை மதுரவாயல் (NH-4) வரை இணைக்கும் சுமார் 21 கிமீ நீளம் கொண்ட 4 லேன் டபுள் டெக்கர் சாலை, ரூ.5850 கோடி செலவில் கட்டப்படும். சென்னை துறைமுகத்திற்கு சரக்கு வாகனங்கள் 24 மணி நேரமும் எளிதாக செல்ல இது உதவும். NH-844 இன் 94 கிமீ நீளமுள்ள 4 வழிப்பாதை நெரலூர் முதல் தருமபுரி வரை, NH-227 இன் 31 கிமீ நீளம் கொண்ட 2 வழிப்பாதை மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரை, ஆகிய திட்டங்கள் முறையே சுமார் ரூ.3870 கோடி மற்றும் ரூ.720 செலவில் கட்டப்பட்டு வருகின்றன. இது அந்த பிராந்தியத்தில் தடையற்ற பயண இணைப்பை வழங்க உதவும்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்படும். இந்த திட்டம் ரூ.1800 கோடி செலவில் முடிக்கப்படும். இது நவீன வசதிகளை வழங்குவதன் மூலம் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையில் ரூ.1400 கோடி மதிப்பிலான மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க் அமைக்க பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இது தடையற்ற பார்க்கிங் வசதியை வழங்கும் மற்றும் பல செயல்பாடுகளை வழங்கும்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/pm-modi-dedicates-rs-31400-crore-projects-on-may-26-in-chennai-458290/