24 5 2022
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்து போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
விளாதிமிர் புதினைத் தவிர ரஷ்ய தலைவர்கள் வேறு யாரையும் சந்திக்க தான் விரும்பவில்லை என தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி, போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் அவரை சந்திக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில், உக்ரைனுக்கு எதிராக முழுமையான போரை ரஷ்யா நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட ஜெலன்ஸ்கி, வாழ்வதற்கான உரிமை உள்பட உக்ரைன் மக்களிடம் இருக்கும் அனைத்தையும் பறித்துக்கொள்ளும் நோக்கில் இந்த போர் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உக்ரைனுக்கு உதவ 20 நாடுகள் முன்வந்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியாட் ஆஸ்டின் இதனை தெரிவித்துள்ளார். இதேபோல், உக்ரைனின் கடற்பாதுகாப்பை உறுதிப்படுத்த ஏவுகணை தாங்கிய போர் கப்பலை அனுப்ப உள்ளதாக டென்மார்க் அறிவித்துள்ளது.
source https://news7tamil.live/zelenskyy-would-meet-putin-to-end-war.html