Tamilnadu News Update : கங்கிரஸ் எம்பியும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் வீடு மற்றும் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.
மத்தியில் பாஜக ஆட்சி தொடங்கியதில் இருந்து எதிர்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் தற்போதைய எம்பியுமான ப.சிதம்பரம் வீடு அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இதுவரை 5 முறை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
மேலும் கடந்த 2019-ம் ஆண்டு ப.சிதம்பரத்திற்கு சிபிஐ லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சிபிஐ-யிடம் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தற்போது 5-வது முறையாக ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது.
இதில் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சிபிஐ சோதனை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கார்த்திக் சிதம்பரம்,
எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள். இதுவரை எத்தனை முறை சோதனை நடத்தது என்பதையே நான் மறந்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் தனது வீடு மற்றும் அலுவலகங்களில் 6-வது முறையாக சோதனை நடப்பதாக குறிப்பிட்டுள்ள கார்த்திக் சிதம்பரம் இதற்கு முன்பு சோதனை நடத்தப்பட்ட வருடங்களை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் நிதி மற்றும் உள்துறை அமைச்சராக பணியாறியிருந்தார். அப்போது அவர் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் சட்டத்திற்கு புறம்பாக பணப்பறிமாற்றம் செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cbi-sudden-raid-to-former-minister-p-chidambaram-home-and-office-454833/