செவ்வாய், 17 மே, 2022

பிரதமரின் வீடு கட்டும் திட்டம்; யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும்?

 

Harikishan Sharma

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா –நகர்ப்புறம் (PMAY-U) என்றால் என்ன?

Explained: What is PMAY-U? Who can avail it?: 2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நிரந்தர வீடுகளை வழங்குவதற்காக, ஜூன் 25, 2015 அன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அதாவது பிரதமரின் வீடு கட்டும் திட்டம். PMAY திட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகள் திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்). இது நகர்ப்புறங்களில் கவனம் செலுத்துகிறது. மற்றொன்று PMAY-G எனப்படும் கிராமப்புறங்களுக்கான வீடு கட்டும் திட்டம். இந்த திட்டத்தில் நான்கு பிரிவுகள் உள்ளன: ” In-situ” சேரி மறுமேம்பாடு (ISSR); கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம் (CLSS); கூட்டாண்மையில் மலிவு விலை வீடுகள் (AHP) மற்றும் பயனாளிகள் தலைமையிலான தனிநபர் வீடு கட்டுமானம்/மேம்பாடுகள் (BLC),

இந்த திட்டம் மூலம் இதுவரை எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன?

PMAY-U இல் உள்ள தகவலின்படி, மே 9 2022 வரை இந்த திட்டத்தின் கீழ் 1.21 கோடி வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, அவற்றில் 58.82 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன அல்லது வழங்கப்பட்டுள்ளன. BLC (பயனாளிகள் தாங்களாகவே கட்டிக் கொள்ளுதல்) திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 28.17 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள 30.65 லட்சம் வீடுகள் ISSR, CLSS மற்றும் AHP ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் கட்டப்பட்டுள்ளன.

PMAY-U திட்டத்திற்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டுள்ளது?

PMAY-U க்கு செலவிட ரூ.2.01 லட்சம் கோடியை மத்திய அரசு உறுதி செய்துள்ளது, அதில் ரூ.1.18 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டு ரூ.1.10 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.

பயனாளி தலைமையிலான தனிநபர் வீடு கட்டுமானம்/மேம்பாடுகள் (BLC) என்றால் என்ன?

BLC பிரிவின் கீழ், ஒரு பயனாளி தனது வீட்டைக் கட்டுவதற்கு அரசாங்கத்திடம் இருந்து 2.5 லட்சம் ரூபாய் நிதி உதவி பெறுகிறார். PMAY-U வழிகாட்டுதல்கள் பயனாளி குடும்பத்தை “கணவன், மனைவி மற்றும் திருமணமாகாத மகன்கள் மற்றும்/ அல்லது திருமணமாகாத மகள்கள்” அடங்கிய குடும்பமாக வரையறுக்கிறது.

மேலும், “பயனாளி குடும்பம் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அவர்/அவள் பெயரிலோ அல்லது அவரது/அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ ஒரு நிரந்தர வீடு (அனைத்து காலநிலை குடியிருப்பு அலகு) வைத்திருக்கக் கூடாது” என்று திட்ட வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

திட்ட வழிகாட்டுதல்களின் கீழ், வயது வந்தோருக்கான வருமானம் பெறும் உறுப்பினரை (திருமண நிலையைப் பொருட்படுத்தாமல்) தனி குடும்பமாக கருதலாம். இருப்பினும், இந்தத் திட்டத்தைப் பெற, அவர் அல்லது அவள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அவர்/அவள் பெயரில் ஒரு நிரந்தர வீடு (அனைத்து காலநிலை குடியிருப்பு அலகு) வைத்திருக்கக் கூடாது.

கிராமப்புறங்களில் PMAY-G இன் கீழ், ஒரு பயனாளி தனது தற்போதைய வீட்டை மேம்படுத்துவதற்காக BLC கூறுகளைப் பெறலாம். இருப்பினும், 21 சதுர மீட்டருக்கும் குறைவான பரப்பளவைக் கொண்ட நிரந்த வீட்டைக் கொண்டவர்கள் மட்டுமே இந்த வசதியைப் பெறத் தகுதியுடையவர்கள்.

ஜியோடேகிங் என்றால் என்ன மற்றும் PMAY-U இன் கீழ் இது கட்டாயமா?

ஜியோடேகிங் என்பது புகைப்படம் எடுத்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கு புவியியல் அடையாளத்தை சேர்க்கும் ஒரு செயல்முறையாகும். அதாவது உங்கள் வீடு கட்டுமானத்தின் இருப்பிட விவரம். PMAY-U வழிகாட்டுதல்களின் கீழ், திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அனைத்து வீடுகளும் புவன் HFA (அனைவருக்கும் வீடு) விண்ணப்பத்தில் ஜியோடேக் செய்யப்பட்டிருப்பதை மாநில அரசு உறுதி செய்வது கட்டாயமாகும், இது திட்டத்தை கண்காணிப்பதற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.


புவன் HFA என்றால் என்ன?

புவன் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO) உருவாக்கப்பட்ட ஒரு இந்திய ஜியோ தளமாகும். இது இணைய அடிப்படையிலான பயன்பாடாகும், இது பயனர்கள் பல்வேறு வரைபடம் தொடர்பான சேவைகளை அணுக அனுமதிக்கிறது. PMAY-U இன் கீழ் கட்டப்பட்ட அல்லது கட்டப்படும் வீடுகளின் படங்களை ஜியோடேக்கிங் செய்யும் வசதியையும் இந்த அப்ளிகேஷன் வழங்குகிறது.

source https://tamil.indianexpress.com/explained/explained-pmay-u-who-can-avail-it-454661/