செவ்வாய், 24 மே, 2022

ஞானவாபி Masjid விவகாரத்தில் அடுத்தது என்ன?

 ஞானவாபி Masjid தொடர்பான வழக்கில் நாளை உத்தரப் பிரதேச மாநிலம், வாராணாசி மாவட்ட நீதிமன்றம் நாளை விசாரிக்கவுள்ளது.


ஞானவாபி மசூதி தொடர்பாக ஹிந்துக்கள் தரப்பில் 2 மனுக்களும், Masjid தரப்பில் ஒரு மனுவும் என மொத்தம் 3 மனுக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்காக உள்ளது.
உத்தரவு 7, விதி 11 இன் கீழ் பராமரிப்புக்கான விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி முதலில் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் தரப்பு கூறியது. மறுபுறம், ஆய்வுக் குழு தாக்கல் செய்த அறிக்கையை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும் என்று இந்து தரப்பு கோரியது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் விசாரணையை எப்படி தொடரலாம் என்பது தொடர்பான உத்தரவை ஒத்திவைத்தார்.

இதனையடுத்து இந்த விசாரணை எப்படி நடத்தப்படும் என்பது தொடர்பான உத்தரவு நாளை வெளியாகவுள்ளது. கடந்த வாரம் ஞானவாபி Masjid தொடர்பான வழக்கை வாரணாசி விசாரணை நீதிமன்றத்திலிருந்து மாவட்ட நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. வாராணாசியில் உள்ள ஞானவாபி Masjidயின் சுற்றுச்சுவரில் இருக்கும் ஹிந்து கடவுள்களை வழிபட அனுமதிக்குமாறு ஹிந்துப் பெண்கள் வாராணாசி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், Masjidயை கள ஆய்வு செய்து அதை வீடியோவாக எடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கள ஆய்வு மேற்கொண்டபோது Masjid வளாகத்தில் சிவலிங்கம் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே, Masjid நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வாராணாசி மாவட்ட நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றி உத்தரவு பிறப்பித்தது.

23 5 2022

source https://news7tamil.live/what-is-next-in-gyanavapi-case-in-varanasi-court-decide-tomorrow.html