சனி, 1 அக்டோபர், 2022

ஒரே ஆண்டில் அரிசி 8%, கோதுமை 19% விலை அதிகரிப்பு

1 10 2022

அரிசி மற்றும் கோதுமையின் சில்லறை வணிக விலை கடந்த ஒரு ஆண்டில் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய நுகர்வோர் அமைச்சகம் சில்லறை வணிகம் மற்றும் மொத்த விலை குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஒரு ஆண்டில் கோதுமையின் சில்லறை விலை ரூ.27லிருந்து ரூ.31 ஆக கடந்த வியாழக்கிழமை இருந்தது. இது 14% அதிகமாகும். இந்த விலை தற்போது ஒரு கிலோவுக்கு ரூ.36.2 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 19% அதிகமாகும். இதேபோல் அரிசியின் விலை கிலோவிற்கு ரூ.38.2 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 8% அதிகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்தத வட்டி விகித உயர்வு உணவு பொருட்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். காரீப் நெல் உற்பத்தி குறைவதால் கோதுமையின் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மேலும், பருவமழை தாமதமாவதாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகவும் காய்கறிகளின் விலைகள், குறிப்பாக தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. இது மற்ற உணவு பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது என குறிப்பிடிருந்தார்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிரதமர் மோடியின் கரீக் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உணவு தானிய பொருட்கள் மேலும் 3 மாத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் உள்ள 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள்.

அதேநேரம் மத்திய உணவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் மற்றும் இதர திட்டங்களின் கீழ் மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான தானிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/8-increase-in-price-of-rice-and-19-of-wheat-in-a-single-year.html