சனி, 8 அக்டோபர், 2022

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துகள் கிடையாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

 சமுதாயம் தனது பொதுப் பண்புகளை வேகமாக இழந்து வருவதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாகத் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி, தனது சொத்துக்களை மூத்த மகன் பெயருக்கு எழுதி வைத்திருந்தனர். ஆனால், வயதான காலத்தில் தங்களைக் கவனிக்காமலும், மருத்துவச் செலவுகளுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால், சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்துப் பெற்றோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷா விசாரித்தார்.

நகைகளை விற்றும், சேமிப்புகளைக் கரைத்தும், தங்கள் மருத்துவச் செலவுகளை தாங்களே கவனிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளிய மகன்களின் செயல்பாடு, இதயமற்றது என விமர்சித்த நீதிபதி, கடந்த 2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டப்படி, கவனிக்காத குழந்தைகளுக்குச் சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்யப் பெற்றோருக்கு உரிமை உள்ளதாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தந்தை மகற்காற்றும் உதவி.என்ற திருக்குறளை மேற்கோள்காட்டிய நீதிபதி, சமுதாயத்தின் பொதுப் பண்புகளை இந்த குறள் எதிரொலிப்பதாகவும், தற்போது சமூகம் இந்த விழுமியத்தின் முக்கியத்துவத்தை வேகமாக இழந்து வருகிறது என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.



source https://news7tamil.live/children-who-neglect-their-parents-have-no-property-madras-high-court-verdict.html

Related Posts:

  • கைது செய்யப்பட்டது தவறானது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்கிற இடதுசாரி அமைப்பை சேர்ந்த இளைஞர் ஒருவரை பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார் என்று கூறி தேசி… Read More
  • Become Online Programmer ஆன்லைன் மூலம் புரோகிராம் (கணினி மொழி) எழுதி நம்மை வல்லவர்களாக மாற்ற உதவும் தளம். புதிதாக கணினி துறைக்குள் புகும் நண்பர்கள் தான் தற்போது பலவ… Read More
  • கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ் எனப் பெருமைமிகு அறிமுகத்தை மட்டுமே பெற்றிருக்கும் பலருக்கும் அதிர்ச்சி தரக் கூடிய வகையில் கொலம்பஸ்ஸின் மற்று… Read More
  • குகை தோழர்கள் ::: அஸ்ஹாபுல் கஹ்ஃபு -  குகை தோழர்களை அல்லாஹ் உறங்க வைத்த குகை. இக்குகை ஜோர்டான் நாட்டின் தலைநகரம் அம்மானுக்கு அருகில் ரக்கீம் என்ற இடத்தில்… Read More
  • மரபணு மாற்றம் மரபை மீறும் மரபணு மாற்றம் :அச்சத்தில் விவசாயிகள்  1980களில், ஒரே இனத்தைச் சேர்ந்த இரு தாவரங்களின் மரபணுவை சேர்த்து ஒட்டுமுறை தாவரம்… Read More