இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் இதர எரிபொருட்களின் விலை எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு இந்தாண்டு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை வைத்தும் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை வைத்தும் பெட்ரோல், டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றது.
அதன் அடிப்படையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு (பெட்ரோல்- 102.63 ரூபாய்க்கும், டீசல்- 94.24 ரூபாய்க்கும்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 140வது நாளாக இன்றும் எண்ணெய் நிறுவனங்கள் எந்த மாற்றமும் இன்று இதே விலையில் விற்பனை செய்கிறார்கள்.
சவரனுக்கு ரூ.40 உயர்ந்த தங்கம்: வெள்ளி விலை நிலவரம் என்ன?
உலகச் சந்தைகளில், அமெரிக்க டாலர் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
எரிசக்தி நெருக்கடி ஐரோப்பிய பொருளாதாரத்தை மந்தநிலைக்குள் தள்ளக்கூடும் என்கிற காரணத்தினால், யூரோ டாலருக்கு இணையாக மதிப்பு இருந்தது. டாலரின் வலிமை மற்ற நாணயங்களை வாங்குபவர்களுக்கு கிரீன்பேக்-விலை தங்கத்தின் விலையை உயர்த்துகிறது.
இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:
இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 48,000 ஆக உள்ளது. நேற்றைய விலையிலிருந்து எந்த மாற்றமும் ஏற்படாமல் உள்ளது. 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 52,360 ஆக உள்ளது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய மூன்று நகரங்களிலும் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ. 60,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவிற்கு ரூ.800 குறைந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை:
தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5 அதிகரித்து, ரூ. 4,840 ஆகவும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.38,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,280 என சவரனுக்கு ரூ. 42,240 ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.66க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.66,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.