வெள்ளி, 14 அக்டோபர், 2022

வாழைப்பழ பாயாசம்

வாழைப்பழ பாயாசம்.. கேள்விப்பட்டு இருக்கீங்களா? சிம்பிள் ரெசிபி இதோ!

வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறைந்த விலையில் நிறைய ஊட்ச்சத்துகளை கொண்டது இந்தப் பழம். வாழைப்பழம் தினமும் சாப்பிடுவது உடல் நலத்திற்கு உகந்தது. நிறைய வகை வாழைப்பழங்கள் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய பழம். எளிதாக கிடைக்க கூடிய பழம். வாழைப்பழத்தை தோல் உரித்து அப்படியே சாப்பிடலாம். இருப்பினும் இதை வைத்து சுவையான ரெசிபிகளும் செய்து சாப்பிடலாம். அந்தவகையில் வாழைப்பழ பாயாசம் செய்வது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 


  1. பழுத்த மலை வாழைப்பழம் – 4
  2. சர்க்கரை – 100 கிராம்
  3. தேங்காய் – 1
  4. ஏலக்காய் – தேவையான அளவு
  5. முந்திரிப் பருப்பு – 25 கிராம்
  6. பேரிச்சம் பழம் – 6

செய்முறை

முதலில் வாழைப்பழங்களின் தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பு, பேரிச்சம் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி கடாய்யில் போட்டு நெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து தேங்காயை துருவி அரைத்து, சிறிதளவு நீர் விட்டு பால் எடுக்க வேண்டும். தேங்காய் பாலில் சர்க்கரை சேர்த்து கலக்கவும். பின், ஏலக்காய் பொடி, வாழைப்பழம், முந்திரி, பேரிச்சம் பழம் என
அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும். அவ்வளவு தான், இந்தக் கலவையை சிறிது நேரம் பிரிஜ்ஜில் வைத்து ஜில்-லென பரிமாறலாம். இந்த பாயாசத்தை செவ்வாழைப்பழத்தை கொண்டும் செய்யலாம். டேஸ்டாக இருக்கும்.