கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சபாநாயகர் மு. அப்பாவு திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணு மின் நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், 4ஆவது அணு உலை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. இதற்காக, 136 தனியார் நிறுவனங்கள் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு ஆதரவாக சபாநாயகர் மு. அப்பாவு பேச்சுவார்த்தை நடத்த சென்றார். அப்போது இந்தப் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
இதனால் கோபமுற்ற மு. அப்பாவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் அப்பாவு கேட்டுக்கொண்டார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் முதலில் தொடங்கப்பட்டபோது, அங்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும், அப்பகுதி உள்ளூர் மக்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும் என பல்வேறு கோரிக்கைகள் கொடுக்கப்பட்டன.
ஆனால் இதையெல்லாம் நிறுவனம் இன்றளவும் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றஞ்சாட்டு இன்றளவும் தொடர்கிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/appau-dharna-protest-in-kudankulam-nuclear-project-campus-542462/