17 12 2022
மூத்த குடிமக்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து பயண டோக்கன் வழங்கும் திட்டம், வரும் 21ஆம் தேதி முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வதற்கான டோக்கன்கள் வழங்கும் திட்டத்தினை, வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி முதல் மீண்டும் துவங்க முடிவுசெய்துள்ளனர்.
சென்னை மாநகரம் முழுவதும் 40 இடங்களில் மூத்த குடிமக்களுக்கு டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் அறிவித்துள்ளார்.
வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான அடுத்த அரையாண்டிற்கான காலகட்டத்திற்கு, மூத்த குடிமக்கள் மாநகரப் போக்குவரத்து கழகத்திலே இயங்கக்கூடிய பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்வதற்கான டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.
மேலும், இந்த கட்டமில்லா பேருந்து பயணத்திற்கான டோக்கன்களை பெறுவதற்கு குடும்ப அட்டை சான்றுடன் ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
டிசம்பர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை, காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை மக்கள் சென்று அவர்களது பயண டோக்கனை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/greater-chennai-corporation-announces-free-bus-pass-for-senior-citizens-560356/