செவ்வாய், 10 ஜனவரி, 2023

மதமாற்றம் ஒரு தீவிரப் பிரச்னை… அரசியல் சாயம் பூசக்கூடாது – சுப்ரீம் கோர்ட்

 

9 1 2023

மதமாற்றம் ஒரு தீவிரப் பிரச்னை… அரசியல் சாயம் பூசக்கூடாது – சுப்ரீம் கோர்ட்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் சி.டி. ரவிக்குமார் அடங்கிய அமர்வு, மிரட்டல், அச்சுறுத்தல், பரிசுகள், பணம் கொடுத்து ஏமாற்றுதல் மூலம் மதமாற்றம் செய்வதைத் தடுக்கக் கோரிய வழக்கில் தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணி ஆஜராகி நீதிமன்றத்துக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.

கட்டாய மத மாற்றம் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும், குடிமக்களின் மத சுதந்திரத்தை பாதிக்கும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியது. மதமாற்றம் என்ற மிகவும் தீவிரமான பிரச்னையை சமாளிக்க நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ள மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

மத மாற்றத்திற்கு அரசியல் சாயம் பூசக் கூடாது. இது ஒரு தீவிரமான பிரச்னை என்பதைக் கவனித்த உச்ச நீதிமன்றம், மோசடியான மத மாற்றங்களைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய மனு மீது தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணியின் உதவியை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நாடியது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மிரட்டல், அச்சுறுத்தல், பரிசுகள் மற்றும் பணம் கொடுத்து ஏமாற்றுதல் மூலம் மதமாற்றம் செய்வதைத் தடுக்க கோரி தொடர்ந்த வழக்கில் வெங்கடரமணி ஆஜராகி, நீதிமன்றத்துக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.

“எங்களுக்கு உங்கள் உதவியும் வேண்டும், ஏஜி. கட்டாயப்படுத்தியும் கவர்ச்சியின் மூலமும் மதமாற்றங்கள் செய்யப்படுகிறது. இதற்கு பல வழிகள் உள்ளன, கவர்ச்சி அல்லது எதன் மூலம் மதமாற்றம் எப்போது செய்யப்படுகிறது? திருத்த நடவடிக்கைகள் என்ன?” என்று உச்ச் நீதிமன்றம் கேட்டது.

தொடக்கத்தில், தமிழ்நாடு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி வில்சன், இந்த மனுவை “அரசியல் உள்நோக்கம் கொண்ட பொதுநல வழக்கு என்று கூறினார். மாநிலத்தில் இதுபோன்ற மதமாற்றங்கள் பற்றிய பிரச்னையே இல்லை” என்று வலியுறுத்தினார்.

உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த ஆட்சேபனை குறித்து குறிப்பிடுகையில், “நீங்கள் இப்படி கிளர்ந்தெழுவதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம். நீதிமன்ற நடவடிக்கைகளை வேறு விஷயங்களாக மாற்ற வேண்டாம். … மொத்த மாநிலத்திற்காகவும் நாங்கள் கவலைப்படுகிறோம். உங்கள் மாநிலத்தில் இது நடந்தால், அது மோசமானது. இல்லை என்றால் நல்லது. ஒரு மாநிலத்தை குறிவைத்து நடத்துவதாக பார்க்க வேண்டாம். இதை அரசியல் ஆக்காதீர்கள். மோசடியான மத மாற்றங்களைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கோரி வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

கட்டாய மத மாற்றம் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும், குடிமக்களின் மத சுதந்திரத்தை பாதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியது. இந்த மிகவும் தீவிரமான பிரச்சினையை சமாளிக்க நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ள மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

ஏமாற்றுதல், கவர்ச்சி மற்றும் மிரட்டல் மூலம் மதமாற்றம் செய்வதை நிறுத்தப்படாவிட்டால், மிகவும் கடினமான சூழ்நிலை உருவாகும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மதச் சுதந்திரத்தில் மற்றவர்களை மதம் மாற்றும் உரிமை இல்லை என்று குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. திருமணத்தின் மூலம் மதமாற்றம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதியை கட்டாயமாக்கும் மாநில சட்டத்தின் விதிக்கு உயர் நீதிமன்றத்தின் தடையை நீக்கக் கோரியது.

இந்த மனுவுக்கு மத்திய அரசு மற்றும் பிறரிடம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 23-ம் தேதி உத்தரவிட்டது.

அஷ்வினி குமார் உபாத்யாய் தனது மனுவில், கட்டாய மத மாற்றம் என்பது நாடு தழுவிய பிரச்சனையாக உள்ளது. இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். மக்களுக்கு ஏற்பட்ட காயம் மிகவும் பெரியது. ஏனென்றால், தவறாக நேர்மையற்ற வழியில் மத மாற்றம் செய்யப்படாத ஒரு மாவட்டம் கூட இல்லை என்று அவர் தனது மனுவில் கூறினார்.

“நாடு முழுவதும் ஒவ்வொரு வாரமும் மிரட்டி, அச்சுறுத்தி ஏமாற்றி பரிசுகள் மற்றும் பணப் பலன்கள் மூலமாகவும், சூனியம், மூடநம்பிக்கை, அற்புதங்கள் மூலமாகவும் மதமாற்றம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த அச்சுறுத்தலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை” என்று வழக்கறிஞர் அஷ்வனி குமார் துபே மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மிரட்டல் மற்றும் பண ஆதாயங்கள் மூலம் மத மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒரு அறிக்கை மற்றும் மசோதாவை தயாரிக்க இந்திய சட்ட ஆணையத்திற்கு வழிகாட்டுதல்களையும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

source https://tamil.indianexpress.com/india/supreme-court-says-religious-conversion-a-serious-issue-should-not-be-given-political-colour-573675/