7 1 2023

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.
அப்போது அவர் கூறியதாவது, “ஒரு அதிகாரத்தில் இருக்கிறவர் தவறு செய்கிறபோது, அதை சுட்டிக்காட்டினால் அதனை திருத்திக்கொள்வதுதான் நல்ல பண்பு.
ஆனால், நாம் நம் தமிழக ஆளுநர் மீது விமர்சனம் வைக்க வைக்க, அவர் தீவிரமாக செல்கிறார். நாம் தனித்தனி காட்சிகளாக இருந்து போராடியது மட்டுமல்லாமல், கூட்டணி காட்சிகள் சேர்ந்து ஏதாவது ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. மற்ற கட்சிகளுடன் இனைந்து இதற்கான முயற்சிகளை கலந்துரையாடி அறிவிப்போம்.
தமிழ்நாடு எனும் பெயரை யாரோ தீர்மானித்து சொல்வது கிடையாது. தமிழ்நாடு என்கிற பெயர்மாற்றம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தத்தை மேற்கொண்டு வந்திருக்கிறது.
அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர், நாடாளுமன்ற சட்டதிருத்தத்திற்கு எதிராக பேசுவது ஏற்புடையது அல்ல”, என்று அவர் கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cpim-secretary-k-balakrishnan-about-tamil-nadu-governor-r-n-ravi-572155/