10 2 23
காங்கிரஸ் கட்சித் தலைவரும் மாநிலங்களையின் எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, வியாழக்கிழமை (பிப்ரவரி 9) ராஜ்ய சபா தலைவர் ஜெக்தீப் தன்கருக்கு எழுதிய கடிதத்தில், அரசியலமைப்பின் 105-வது பிரிவை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பிரிவு எப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் அதிகாரங்களைக் கையாள்கிறது. இந்த ஏற்பாடு என்ன கூறுகிறது. இந்த பிரிவு எம்.பி.க்களை எப்படி பாதுகாக்கிறது?
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான தனது உரையின் சில பகுதிகளை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, எம்.பி.க்களுக்கு பேச்சு சுதந்திரம் இருப்பதாகவும், அவையில் தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் எதையும் தாம் கூறவில்லை என்றும் வாதிட்டார்.
மல்லிகார்ஜுன கார்கே ராஜ்யசபா தலைவர் ஜெக்தீப் தன்கருக்கு வியாழக்கிழமை எழுதிய கடிதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் அதிகாரங்களைக் கையாளும் அரசியலமைப்பின் 105 வது பிரிவை மேற்கோள் காட்டியுள்ளார். இந்த ஏற்பாடு என்ன கூறுகிறது, அது எம்.பி.க்களை எப்படி பாதுகாக்கிறது?
அரசியலமைப்பின் 105-வது பிரிவு என்ன கூறுகிறது?
அரசியலமைப்பின் 105-வது பிரிவு, நாடளுமன்றத்தின் அவைகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் மற்றும் குழுக்களின் அதிகாரங்கள், சிறப்புரிமைகள் ஆகியவற்றைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்த பிரிவு நான்கு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
“(1) அரசியலமைப்பின் விதிகள் மற்றும் நாடாளுமன்றத்தின் நடைமுறையை ஒழுங்குபடுத்தும் விதிகள் மற்றும் நிலைக்குழு ஒழுங்குகளுக்கு உட்பட்டு, நாடாளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் இருக்கும்.
(2) எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் எந்தவொரு விஷயம் குறித்தும் அல்லது நாடாளுமன்றத்திலோ அல்லது அதன் எந்தவொரு குழுவிலோ அவர் அளித்த வாக்கு தொடர்பாக எந்தவொரு நீதிமன்றத்திலும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பேற்க மாட்டார்கள். மேலும், எந்தவொரு அறிக்கை, செய்திகள், வாக்குகள் அல்லது நடாளுமன்ற நடவடிக்கைகளின் அதிகாரத்தின் கீழ் அல்லது அறிக்கைகள் தொடர்பாக எந்த நபரும் பொறுப்பாக மாட்டார்கள்.
(3) மற்ற விஷயங்களில், ஒவ்வொரு நாடாளுமன்ற அவையின் அதிகாரங்கள், சிறப்புரிமைகள் மற்றும் விதிவிலக்குகள், மற்றும் ஒவ்வொரு அவையின் உறுப்பினர்கள் மற்றும் குழுக்களின், சட்டத்தால் அவ்வப்போது நாடாளுமன்றத்தால் வரையறுக்கப்படக் கூடியதாக இருக்கும். வரையறுக்கப்பட்டவை, அரசியலமைப்பின் 44வது திருத்தச் சட்டம், 1978-ன் 15-வது பிரிவின் நடைமுறைக்கு வருவதற்கு அந்த சபை மற்றும் அதன் உறுப்பினர்கள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
(4) உட்பிரிவுகள் (1), (2) மற்றும் (3)-ன் விதிகள், இந்த அரசியலமைப்பின் மூலம் ஒரு சபையின் நடவடிக்கைகளில் பேசுவதற்கும், பங்கு பெறுவதற்கும் உரிமை உள்ள நபர்களுக்குப் பொருந்தும். நாடாளுமன்றம் அல்லது அதன் எந்தவொரு குழுவும் அவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக பொருந்தும்.”
எளிமையாகச் சொல்வதானால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமைகளின்போது வெளியிடப்படுகிற எல்லா அறிக்கைகள் அல்லது செயலுக்கும் எந்தவொரு சட்ட நடவடிக்கையிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறார்கள். உதாரணமாக, சபையில் கூறப்படும் அறிக்கைக்காக அவதூறு வழக்கு தொடர முடியாது.
இந்தியாவிற்கான அட்டர்னி ஜெனரல் அல்லது உறுப்பினராக இல்லாமல் சபையில் பேசும் அமைச்சர் போன்ற சில உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் இந்த விலக்கு உள்ளது. ஒரு உறுப்பினர் அனுமதிக்கக்கூடிய பேச்சுரிமையின் வரையறைகளை மீறும் அல்லது மீறும் சந்தர்ப்பங்களில், சபாநாயகர் அல்லது அவையே நீதிமன்றத்திற்கு எதிராக அதைப் பற்றி கையாளும்.
இந்த சலுகைக்கு முற்றிலும் தடைகள் இல்லையா?
உண்மையில் சில தடைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, அரசியலமைப்பின் 121வது பிரிவு, “உச்சநீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் எந்தவொரு நீதிபதியும் தனது கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதைத் தடைசெய்கிறது. நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டி ஜனாதிபதியிடம் தீர்மானத்தைத் தவிர முன்வைப்பதற்கான கோரிக்கையைத் தவிர மற்றவைகளை தடை செய்கிறது”
நாடாளுமன்றத்தின் இந்த சிறப்புரிமை பற்றிய யோசனை எங்கே இருந்து வந்தது?
1935-ம் ஆண்டு இந்திய அரசு சட்டம், பிரிட்டனில் உள்ள பொதுமக்கள் அவைக்கு உள்ள அதிகாரங்கள் மற்றும் சலுகைகள் பற்றிய குறிப்புகளுடன் இந்த ஏற்பாட்டை இந்தியாவிற்கு முதலில் கொண்டு வந்தது. அரசியலமைப்பின் ஆரம்ப வரைவில்கூட பொதுமக்கள் அவை பற்றிய குறிப்பு இருந்தது. ஆனால், அது பின்னர் கைவிடப்பட்டது.
இருப்பினும், அரசியலமைப்பு உச்சபட்ச அதிகாரம் என்கிற முறையைப் பின்பற்றும் இந்தியாவைப் போலல்லாமல், பிரிட்டன் நாடாலுமன்றமே உச்ச அதிகாரம் என்பதைப் பின்பற்றுகிறது. பொதுமக்கள் அவையின் சிறப்புரிமைகள் பொதுவான சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. பல நூற்றாண்டுகளாக முன்னுதாரணங்கள் மூலம் உருவாக்கப்பட்டன.
17ஆம் நூற்றாண்டு நடந்த ஒரு வழக்கில் ‘ஆர் எதிரி எலியட், ஹோல்ஸ் அண்ட் வாலண்டைன்’, சர் ஜான் எலியட் என்ற பொதுமக்கள் அவை உறுப்பினர் விவாதத்தில் தேசத்துரோக வார்த்தைகள் பேசியதற்காகவும் சபாநாயகருக்கு எதிரான வன்முறைக்காகவும் கைது செய்யப்பட்டார். இருப்பினும், பிரபுக்கள் சபை சர் ஜானுக்கு விலக்கு அளித்தது. நாடாளுமன்றத்தில் பேசப்படும் வார்த்தைகள் அவையில் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கூறினர்.
இந்தச் சிறப்புரிமை 1689 ஆம் ஆண்டு உரிமைகள் சட்டத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து நாடாளுமன்றம் அரசியலமைப்பு முடியாட்சியின் கொள்கையை உறுதியாக நிறுவியது.
1884-ம் ஆண்டு வழக்கான, ‘பிராட்லாக் வி. கோசெட்’ வழக்கில், அப்போதைய பிரபுக்கள் சபையின் தலைமை நீதிபதி கோல்ரிட்ஜ் பிரபு இவ்வாறு குறிப்பிட்டார்: “நாடாளுமன்றச் சுவர்களுக்குள் என்ன பேசப்படுகிறதோ அல்லது செய்யப்பட்டதோ அதை நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது.” என்று கூறினார்.
இந்தியாவில் நீதிமன்றங்கள் என்ன தீர்ப்பளித்தன?
1970-ம் ஆண்டு ‘தேஜ் கிரண் ஜெயின் எதிரி என் சஞ்சீவ ரெட்டி’ வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக பூரி சங்கராச்சாரியாரின் சீடர்கள் தாக்கல் செய்த நஷ்ட ஈடு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அந்தத் தீர்ப்பில், “மார்ச் 1969-ல் பாட்னாவில் உலக இந்து சமய மாநாடு நடைபெற்றது. அதில் சங்கராச்சாரியார் பங்கேற்று, தீண்டாமை இந்து மதத்தின் கொள்கைகளுக்கு இசைவாக இருப்பதையும், எந்தச் சட்டமும் அதன் வழியில் நிற்க முடியாது என கூறியதாகவும் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது வெளிநடப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.”
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டபோது, பிராமணர்களுக்கு எதிராக தகாத வார்த்தைகள் கூறப்பட்டதாக மனுதாரர்கள் கூறினர். மனுதாரர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு என்பது நடவடிக்கை முறைகேடுக்கு எதிரானது, சட்டவிரோதத்திற்கு எதிரானது அல்ல என்று வாதிட்டனர்.
இருப்பினும், 105-வது பிரிவில் உள்ள ‘எதையும்’ என்ற சொல் மிகவும் பரந்த பொருளில் ‘எல்லாவற்றிற்கும் சமமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
*கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்குப் பிறகு, 1998-ல், ‘பி.வி. நரசிம்ம ராவ் எதிரி அரசாங்கம் வழக்கில், நாடாளுமன்ற சிறப்புரிமை தொடர்பான இரண்டு கேள்விகளுக்கும் உச்ச நீதிமன்றம் பதிலளித்தது.
1993-ல், நரசிம்மராவ், மத்தியில் ஒரு சிறுபான்மை அரசின் பிரதமராக இருந்தார். அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது, ஆளுங்கட்சியின் சில பிரிவுகள் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து தீர்மனத்துக்கு எதிராக வாக்களித்தன. தீர்மானத்துக்கு ஆதரவாக 251 உறுப்பினர்களும் எதிராக 265 உறுப்பினர்களும வாக்களித்து அவையில் தோற்கடிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்திற்கு வந்த இரண்டு கேள்விகள்
முதல் கேள்வி, சட்டப்பிரிவு 105 (1) மற்றும் 105 (2) ஆகியவற்றின் கீழ், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடராமல் எம்.பி.க்கள் விலக்கு கோர முடியுமா என்பது.
இரண்டாவது கேள்வி, ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் கீழ் ஒரு எம்.பி “அரசாங்க ஊழியரா” என்பது ஆகும்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது ஒரு எம்.பி லஞ்சம் வாங்குவதற்கு சாதாரண சட்டம் பொருந்தாது என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. “சட்டப்பிரிவு 105(2) ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பாதுகாக்கிறது, அல்லது நாடாளுமன்றத்தில் அவர் கூறியதற்கு அல்லது அவர் அளித்த வாக்குகள் தொடர்பாக , அல்லது அவருடைய அக்கறை, அல்லது அவருடைய தொடர்புகள் பற்றி அல்லது அவருடைய தொடர்பு அல்லது எந்தவொரு முரண்பாடு தொடர்பாக” என்று பிரிவு அரசியலமைப்பு பிரிவு 105 (2)-ன் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பிற்கு பரந்த அளவில் அதிகாரம் அளித்து நீதிமன்றம் கூறியது.
“நாடாளுமன்ற விவாதங்களில் உறுப்பினர்கள் அச்சமின்றி பங்கேற்கலாம்” என்று கூறிய உச்ச நீதிமன்றம் அதை நியாயப்படுத்தியது. மேலும், இந்த உறுப்பினர்களுக்கு அவர்களின் பேச்சு அல்லது வாக்குடன் தொடர்புடைய அனைத்து சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளுக்கு எதிராக பரந்த அளவிலான பாதுகாப்பு தேவைப்படுகிறது என்று கூறியது.
source https://tamil.indianexpress.com/explained/parliament-free-speech-article-105-constitution-what-supreme-couurt-ruled-591574/