ராஜஸ்தான் தேர்தல் கூடியவிரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இஸ்லாமியர்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரான ஓவைசி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் தேர்தல் கூடியவிரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாரத்பூர் மற்றும் சச்சின் பைலட் தொகுதியான டொக்-ல் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரான ஓவைசி வார இறுதி நாட்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் அவர் பேசியபோது இஸ்லாமியர்களுக்கு அரசியல் அதிகாரம் முக்கியம் என்றும் அது கிடைத்தால் மட்டுமே இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் அவர்களின் வேதனைக்கு ஒரு தீர்வு காண முடியும் என்று கூறினார் . மேலும் ஒரு வலுவான தலைவரும் தேவை என்றும் கூறினார்.
சமீபத்தில் ராஜஸ்தானை சேர்ந்த 2 இளைஞர்களை, இந்து முன்னணி அமைப்பான ஹரியானாவை சேர்ந்த பாரத் கவ் ராஷ்ட்ர தல் கொலை செய்தது. இந்த சம்பவத்தை உதராணமாக காட்டி ஓவைசி பேசினார்.
” ராஜஸ்தானில், ஊட்டசத்து குறைவான குழந்தைகளில் இஸ்லாமிய குழந்தைகளின் சதவிகிதம் 32% ஆகும். மேலும் இஸ்லாமிய குழந்தைகளுக்குத்தான் ரத்த சோகை நோய் அதிகமாக ஏற்படுகிறது. இதற்கு யார் காரணம் ? “ என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“ராஜஸ்தானில் இஸ்மியர்கள் 10 % இருப்பார்கள் அதாவது 10 லட்சம் பேர் இருப்பாரக்ள். தெலுங்கானாவில் 12 % அதாவது 45 லட்சம் இஸ்மியர்கள் இருப்பார்கள். ஆனால் தெலுங்கான பட்ஜெட்டில் இஸ்லாமியர்களுக்கு ரூ. 1,728 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் ராஜஸ்தானில் வெறும் ரூ. 480 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
” தெலுங்கானாவில் ஏஐஎம்ஐஎம் கட்சி 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர், ஆனால் எங்களிடம் அமைச்சர்கள் இல்லை. ஆனால் நாங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, இஸ்லானியர்களுக்காக செயல்பட வைப்போம். இதைத்தான் அரசியல் அதிகாரம் என்று சொல்கிறேன். இதனால் நீங்கள் வாக்கு செலுத்தும்போது இதை யோசிக்க வேண்டும் “ என்று தெரிவித்தார்.
பாஜவின் ’பி- டீம் தான் ஓவைசி என்று குற்றச்சாட்டுக்கு ஓவைசி பிரச்சாரத்தின்போது பதிலளித்தார். “ ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ( காங்கிரஸ்) அவர்களுடன் நான் இல்லை. அதேபோலதான் பிரதமர் மோடி அல்லது பாஜகவுடனும் நான் இல்லை. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் இஸ்லாமியர்களுக்கு அரசியல் அதிகாரம் கொடுக்க மறுக்கின்றனர். ஒரு கட்சிகளுமே இஸ்லாமியர்களை பலவீனமாக வைத்திருக்க நினைக்கின்றனர்” என்று அவர் கூறினார்.
“காங்கிரஸின் வாக்குகளை பிரிக்க வந்ததாக கூறுகிறார்கள். 2018-ம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆனால் 2019 மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவியது” என்று அவர் கூறினார்
“ இத்தனை வருடங்களாக இஸ்லாமியர்கள் வாக்கு செலுத்திய கட்சிகள் அவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. சமத்துவம் எங்கே? “ என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஓபிசி, இஸ்லாமியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டார். .மேலும் 38 % இஸ்லாமிய இளைஞர் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு கல்வி மற்றும் பணியில் சேருவதற்கான பயிற்சி ஆகியவை மறுக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/political-power-for-muslims-asaduddin-owaisi-makes-his-rajasthan-598207/