ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

நம்பர் பிளேட் விதிமீறல்.. இனி தப்ப முடியாது.. பிடியை இறுக்கும் போலீஸ்

 

25 1 23

சென்னை முழுவதும் வாகன நம்பர் பிளேட்டுகளில் விதிமீறல் இருப்பதாகவும் அதை சீர்படுத்த விதிகளை கடுமையாகும் முயற்சியில் போக்குவரத்து காவல்துறை முடிவு செய்துள்ளது.

சென்னை முழுவதும் இன்று முதல் வாகனங்களில் நம்பர் பிளேட் சோதனையை போக்குவரத்து போலீசார் தொடங்கி இருக்கிறார்கள்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறி நம்பர் பிளேட்டுகளை வைத்திருந்தால், அந்த நம்பர் பிளேட்டுகள் அடையாளம் காணப்பட்டு அபராதம் விதிக்க சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் அரசு, தனியார் என ஏராளமான பார்க்கிங் இடங்களில் இருக்கின்றன. இதில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், அவற்றை சோதனை செய்ய போக்குவரத்து காவல்துறை முற்பட்டுள்ளது.

மேலும்,சாலைகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களையும் காவல்துறை சோதனை செய்து வருகின்றனர்.

நம்பர் பிளேட் விதிமுறையை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்தவுடன், அதற்கான சான்றையும் அந்த இரு சக்கர வாகனம் மீது ஒட்டி இருக்கிறார்கள்.

விதிமீறலை பற்றி அந்த சான்றில் விலக்கியதுடன், அந்த விதிமீறலை சரி செய்துகொள்ள மின்னஞ்சல் முகவை மற்றும் வாட்ஸ் அப் நம்பர் அந்த சான்றிதழில் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி, ஒருமுறை பிடிபட்ட பிறகு மறுபடியும் விதிமீறலில் குறிப்பிட்ட வாகனம் செயல்பட்டால், அவர்களுக்கு அபராதம் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-traffic-police-decided-to-check-number-plates-in-parking-lot-599473/