14 2 23
பி.பி.சி நிறுவனம் பிரதமர் நரேந்திர மோடி குறித்த கேள்வி என்ற ஆவணப்படத்தை வெளியிட்ட நிலையில், டெல்லி, மும்பையில் உள்ள பி.பி.சி அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தியதற்கு மு.க. ஸ்டாலின், சந்திரசேகர ராவ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
குஜராத் கலவரத்தின்போது அப்போது குஜராத் மாநில முதல்வராக இருந்த தற்போது இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு குறித்து மோடி குறித்த கேள்வி ஆவணப்படத்தை பி.பி.சி நிறுவனம் வெளியிட்டது. இந்த ஆவணப்படம் இந்திய அரசியலில் ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டெல்லி, மும்பையில் உள்ள பி.பி.சி நிறுவனம் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் வெளியிட்ட பி.பி.சி நிறுவனம் மீது வருமானவரித்துறை பயன்படுத்தப்படுவதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
பி.பி.சி நிறுவனம் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதற்கு தமிநாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், வி.சி.க தலைவர் திருமாவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்: “எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்துக்கும், வெளிப்படைத் தன்மையோடும் சுதந்திரமாகவும் செயல்படும் அமைப்புகள் இன்றியமையாதவை. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசியல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் பாழடித்து வருபவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது கொடுங்கோன்மையின் உச்சம். எதிர்க் கருத்துக் கொண்டோரை அச்சுறுத்துவதற்கு அதிகாரத்தைப் பயன்படுத்துவது கொடுங்கோலாட்சிக்குச் சான்றாகும்.
பி.பி.சி செய்தி நிறுவனத்தின் மும்பை மற்றும் தில்லி அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை செய்வதை வி.சி.க மிக வன்மையாகக் கண்டிக்கிறது என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/uncategorized/leaders-condemns-to-it-raid-at-bbc-offices-593674/