ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

அதானி வளர்ந்திருக்கிறார், நாடு வீழ்த்திருக்கிறது – கேஎஸ் அழகிரி குற்றசாட்டு

 

19 2 23

மோடி ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கிறார், நாடு வீழ்த்திருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

ஆயுள் காப்பீட்டு கழகம் ,பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை சுமார் 50,000 கோடி ரூபாயை
தற்பொழுது அதானி பங்கு சந்தை மோசடியால் இழந்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ்
கட்சி தலைவர் கே எஸ் அழகிரி குற்றச்சாட்டியுள்ளார்.

திருவாரூரில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக
கும்பகோணம் வந்திருந்த  அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது..

மோடி ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கிறார், நாடு வீழ்ந்து கிடக்கிறது என்றும் , ஆயுள் காப்பீட்டுக் கழகம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை அதானி குழுமத்தில்
முதலீடு செய்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் இழந்துள்ளது. இதற்கு மோடி அலுவலகத்தின் அழுத்தமே காரணம். இது குறித்து பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்கவில்லை. சர்வதேச நாடுகள் இதனை கண்டித்து உள்ளது.

அதிமுகவை பாஜகதான் இயக்குகிறது. ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெறும் . இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல, ஒன்றரை வருட திமுக ஆட்சிக்கு சான்றிதழ் வழங்கும் தேர்தல்.

விக்கிரவாண்டி -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை  மற்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விவாதம் நடத்தும் அளவிற்கு  மந்த நிலையில் உள்ளது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது” என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி  தெரிவித்தார்.

– யாழன்

source https://news7tamil.live/adani-has-grown-under-modi-regime-country-has-failed-ks-alagiri-alleges.html