திங்கள், 27 பிப்ரவரி, 2023

புதிய கல்வி கொள்கை சாமானிய ஏழை மக்களுக்கு எதிரானது- சபாநாயகர் அப்பாவு

 

26 2 23

புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டால் தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்குத்தான் சாதகமாக இருக்குமே தவிர சாமானிய ஏழை எளிய மக்களுக்கு ஆபத்தாகவே முடியும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பழவூரில் மாணவ மாணவிகள் ஒரு மணி நேரம் கண்களை கட்டிக்கொண்டு தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக சபாநாயகர் அப்பாவு குத்து விளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரில் உலக சாதனைக்காக மாணவ மாணவிகள்
ஒரு மணி நேரம் கண்களை கட்டிக்கொண்டு தொடர்ச்சியாக ஒற்ற கம்பை சிலம்பமாக
சுற்றி சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 115 மாணவ மாணவிகள் கலந்து
கொண்டு தங்கள் கண்களை துணியால் கட்டி மறைத்துக்கொண்டு ஒற்றைக் கம்பால்
சிலம்பமாக ஒரு மணி நேரம் சுழற்றி விளையாடினர். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் சாகசத்தினை பெற்றோர்களும் பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

இதையும் படியுங்கள் : திருப்பூர் சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

இதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு தெரிவித்ததாவது..

புதிய கல்விக் கொள்கையால் பெருமிதம் கொள்கிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட புதிய கல்வி கொள்கையானது சமானிய ஏழை எளிய மக்களுக்கு விரோதமான கல்வி கொள்கைதான் என மிகச்சிறந்த கல்வியாளர்கள் எல்லாம் அரசின் கவனத்திற்கு சொல்லியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் பட்டப்படிப்பில் 52 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் சராசரி கல்வி விகிதம் 34 சதவீதம் தான். இந்த புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டால் தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு தான் இந்த கல்வி கொள்கை சாதகமாக இருக்குமே தவிர சமானிய ஏழை எளிய மக்களுக்கு மிகவும் ஆபத்தான கல்வி கொள்கையாகும்” என சபாநாயகர் அப்பாவு  தெரிவித்தார்.

– யாழன்

source https://news7tamil.live/new-education-policy-is-against-common-poor-people-speaker-appavu.html