வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

திரிபுராவில் அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு

 

திரிபுராவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கவும், இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் மார்க்சிஸ்ட் கட்சியும் உள்ளது. நான்கு முனை போட்டி இருந்தாலும், பாஜக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

மேலும் திரிபுரா தேர்தலில் 20 பெண் வேட்பாளர்கள் உட்பட 259 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், வாக்காளர்கள் 3 ஆயிரத்து 337 வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.

இந்த நிலையில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவைடைந்தது. சுமார் 81 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இருப்பினும், வாக்குப்பதிவு இறுதி விவரம் இன்றிரவு வெளியாகும் என கூறியுள்ளது.

  • பி. ஜேம்ஸ் லிசா

source https://news7tamil.live/voting-completes-in-tripura.html