9 2 23
நடிகர் விஜய்யின் பீஸ்ட், சிவகார்த்திகேயனின் டாக்டர் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் பணியாற்றிய நடிகரும், பிரபல கலை இயக்குநருமான டி.ஆர்.கே கிரண், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தும் முக்கிய பாரம்பரிய தலங்கள் அல்லது சுற்றுலாத் தலங்களின் எந்த உருவப்படத்தையும் காட்சிப்படுத்தாதது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிரண் புதன்கிழமை ட்விட்டரில், தமிழகத்தில் உள்ள படங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மற்ற நாடுகளில் உள்ள முக்கிய இடங்களின் படங்களை காட்சிப்படுத்தியதற்கான அதிகாரிகளின் நியாயத்தை கேள்வி எழுப்பினார்.
சென்னை விமான நிலையத்தில் மற்ற நாட்டில் உள்ள சிறந்த இடங்களின் படங்களை வைத்துள்ளார்கள், ஏன்? தமிழ் நாட்டில் சிறந்த இடங்கள் இல்லையா? இல்லை அவர்களுக்கு தெரியவில்லையா.? இது தமிழ் நாட்டின் விமான நிலையம் தானே.? வேறு ஊரில் இப்படி இல்லையே, இங்கு மட்டும் ஏன் இப்படி.?” என்று கிரண் ட்வீட் செய்துள்ளார்.
மேலும், ”விமான நிலையத்திற்கு தான் பல மாநிலங்களில் இருந்தும், பல நாட்டில் இருந்தும் மக்கள் வருகிறார்கள், அவர்களுக்கு நம் கலாச்சாரமும் நமது கலை மற்றும் பண்பாட்டையும் நாம் தானே காட்டவேண்டும்” என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
விரைவில், நெட்டிசன்கள் இந்த ட்வீட்டிற்கு பதிலளித்து, இந்த பிரச்சினையை ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினர்.
இதற்கு விரைந்த பதிலளித்த விமான நிலைய அதிகாரிகள், வரும் நாட்களில் தமிழகத்தின் முக்கிய இடங்கள் விமான நிலையத்தில் இடம்பெறும் என உறுதியளித்தனர்.
“கருத்து நன்றாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. வரும் நாட்களில் முழு காட்சியும் மறுசீரமைக்கப்படும், மேலும் தமிழகத்தின் முக்கிய இடங்கள் விமான நிலைய முனையங்களுக்குள் முக்கியத்துவம் பெறும்” என்று சென்னை விமான நிலையம் ட்வீட் செய்தது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-actor-miffed-lack-of-portraits-states-culture-chennai-airport-591234/