29 2 23
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் பிரதமருக்கான பொது வேட்பாளராக ராகுல்காந்தி தான் இருப்பார் என்று ஈரோட்டில் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஈரோட்டில் முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரும், திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில, “ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வி பெறுபவர்களின் குற்றச்சாட்டு தேர்தல் விதிமீறல்கள் குறித்து தான் இருக்கும். கர்நாடக வனத்துறை தமிழகத்தை சேர்ந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது கடுமையான கண்டனத்துக்குரியது. அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறந்தவர் குடும்பத்திற்கு அதிக இழப்பீடு வழங்கி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசிய ஆடியோ வெளியாகி இருப்பது எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எந்த லச்சனத்தில் அதிமுக தற்போதைய தலைவர்கள் செயல்படுகிறார்கள் என்பதற்கு உதரணமாக தான் உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை பாஜக இல்லா மாநிலத்தில் கூட காங்கிரஸ் கட்சி உள்ளது. எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் உள்ளதால் காங்கிரஸ் இல்லாமல் எதிர்காலத்தில் ஆட்சி அமையாது. பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ். அதே போன்று தான் மோடிக்கு மாற்றாக இருப்பவர் ராகுல்காந்தி என்பதை உணர்ந்ததால் திமுக தலைவர் ஸ்டாலின், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
இதனால் காங்கிரஸ் கட்சியை முன்னிலைப்படுத்தி தான் கூட்டணி அமையும். இதனால் பொது வேட்பாளராக ராகுல்காந்தி தான் இருப்பார். அதானி குறித்து ராகுல்காந்தி கேள்விக்கு இதுவரை நிதியமைச்சர் மற்றும் பிரதமர் பதிலளிக்காமல் கிண்டல் செய்யும் வேலை செய்து வருகிறார். பிரதமர் மோடிக்கு சிம்ம சொப்பனமாக ராகுல்காந்தி இருந்து வருவதால் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளராக இருப்பார்.
யார் ஆட்சி செய்ததாலும் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியாது., இதனை எதிர்கட்சிகள் பேசி பெரிது படுத்துகின்றனர். சீமான் அருந்ததியர் சமுதாயம் பற்றி தவறாக பேசுகிறார், அனைத்து விசயத்திலும் தவறாக தான் பேசி வருகிறார். அவருக்கான இளைஞர்களை வைத்து கொண்டும் பிரபாகரனை முதலீடாக வைத்து கொண்டும் அரசியல் செய்து வருகிறார். இதனால் எந்த காலத்திலும் வெற்றி பெற போவதில்லை.
இதனால் இடைத்தேர்தல் களத்தில் அவர் இல்லை. விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக யார் சொன்னாலும் நான் நம்ப தாயாராக இல்லை. அதற்கான வாய்ப்போ சாந்தியக் கூறுகளோ இருப்பதாக நான் கருதவில்லை எனத் தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-congress-mp-thirunavukkarasu-press-meet-in-erode-595807/