பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (GATE) இந்தியாவின் மிகப்பெரிய தேர்வுகளில் ஒன்றாகும். இந்த நுழைவுத் தேர்வு, பொறியியல் மற்றும் அறிவியலில் பல்வேறு இளங்கலைப் பாடங்களைப் பற்றிய ஒரு மாணவரின் விரிவான புரிதலை சோதிக்கிறது. தேசிய ஒருங்கிணைப்பு வாரியத்தின் சார்பாக ஏழு ஐ.ஐ.டி.,கள் (பம்பாய், டெல்லி, கான்பூர், குவஹாத்தி, ரூர்க்கி, மெட்ராஸ் மற்றும் காரக்பூர்) மற்றும் ஐ.ஐ.எஸ்.சி பெங்களூர் ஆகியவற்றால் ஆண்டுதோறும் சுழற்சி அடிப்படையில் நடத்தப்படுகிறது.
இந்தியாவில், கேட் மதிப்பெண் பல்வேறு முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு பயன்படுத்தப்படுகிறது, அதேநேரம் ஜெர்மனி மற்றும் சிங்கப்பூரில் உள்ள சில கல்வி நிறுவனங்களும் கேட் மதிப்பெண்ணைத் தகுதியாகக் கருதுகின்றன.
நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சிங்கப்பூர்
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட பல்கலைக்கழகம், முதுகலை திட்டங்களில் சேருவதற்கான தகுதியாக GATE மதிப்பெண்ணை ஏற்றுக்கொள்கிறது. அனைத்து சர்வதேச/வெளிநாட்டு விண்ணப்பதாரர்களும் GRE மற்றும் TOEFL மதிப்பெண்களை வழங்குவது கட்டாயம் என்றாலும், இந்திய நாட்டவர்கள் TOEFL க்கு பதிலாக GRE ஐ GATE மற்றும் IELTS மூலம் சேர்க்கை பெறுவதற்கான விருப்பம் உள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, குறைந்தபட்ச GATE சதவீத மதிப்பெண் 90 சதவீதத்திற்கு சமமானதாகவோ அல்லது அதிகமாகவோ இருக்க வேண்டும். இருப்பினும், GATE மதிப்பெண் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடாது.
மியூனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
ஜெர்மனியில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகம், இந்திய விண்ணப்பதாரர்களுக்கு GRE ஐ கேட் மதிப்பெண்கள் மூலம் சேருவதற்கான விருப்பத்தை வழங்கியுள்ளது. கூடுதலாக, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) பட்டம் பெற்ற பட்டதாரிகள், தனி GATE தகுதிச் சான்றிதழை வழங்கத் தேவையில்லை. மேலும், Studienkolleg க்கு விண்ணப்பிக்கும் போது, GATE அல்லது GRE ஐ வழங்க வேண்டிய அவசியமில்லை.
இந்த பல்கலைக்கழகத்தில், தகவல் துறையால் வழங்கப்படும் அனைத்து முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் கேட் மதிப்பெண் தேவைப்படுகிறது (குறைந்தபட்ச மதிப்பெண்: QR 164, AW 4.0). GATE மதிப்பெண் தேவைப்படும் மற்ற படிப்புகள்: MSc Mathematics in Data Science, MSc Materials Science and Engineering, MSc Matter to Life: MSc Computational Mechanics, MSc ESCAPE மற்றும் MSc Environmental Engineering.
RWTH ஆச்சென் பல்கலைக்கழகம் (ஜெர்மனி)
RWTH Aachen பல்கலைக்கழகம், ஒரு இந்திய விண்ணப்பதாரர் கல்லூரி படிப்பில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கூடுதல் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகிறது. இருப்பினும், இது பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளுக்கு மட்டுமே.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்
NUS சிங்கப்பூர் இந்திய விண்ணப்பதாரர்களுக்கு GRE தேர்வை கேட் தேர்வு மூலம் மாற்றுவதற்கான சுதந்திரத்தை வழங்குகிறது. “இந்தியப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் அதற்குப் பதிலாக கேட் மதிப்பெண்களைச் சமர்ப்பிக்கலாம்” என்று பல்கலைக்கழக வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
இது குறிப்பாக கணினி அறிவியலில் Masters in Computer Science, Master of Computing – Information Systems Specialisation, Master of Computing – Infocomm Security Specialisation, Master of Computing – Artificial Intelligence Specialisation, Master of Computing – General Track and Master of Science – Digital Financial Technology (MSc DFinTech) போன்ற முதுநிலை படிப்புகளுக்கு பொருந்தும்.
source https://tamil.indianexpress.com/education-jobs/foreign-universities-accept-gate-score-592278/