ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

கோவில் சிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை – முன்னாள் ஐ.ஜி பொன். மாணிக்கவேல்

 

கோவில் சிலைகளை கண் போல பாதுகாப்பது அரசின் கடமை – முன்னாள் ஐ.ஜி பொன். மாணிக்கவேல்
முன்னாள் ஐ.ஜி பொன். மாணிக்கவேல் (கோப்பு படம்)

குமரியில் புகழ்பெற்ற இந்து கோவில்களில் ஒன்று சுசீந்திரம் தாணு மாலையசுவாமி கோவில். இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த முன்னாள் காவல்துறை சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி.பொன் மாணிக்கவேலை சுவாமி தரிசனம் முடிந்து கோயில் முற்றத்தில் நின்ற அவரை பலரும் நலம் விசாரித்ததுடன் சிலர் கையை பிடித்து குலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

முன்னாள் ஐ.ஜி.மாணிக்கவேல் இடம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பில் பேசியபோது.

இந்தியாவின் தென் கோடி முனைபகுதியான கன்னியாகுமரியில் கடந்த இரண்டு நாட்களாக சோழர் காலத்தில், இப்பகுதியில் கட்டப்பட்ட ஆறு கோவில்களை ஆய்வு மேற்கொண்டோம். உலக சிவனடியார் கூட்டமைப்பு உதவியுடன் கள ஆய்வில் ஈடுபட்டோம். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் எங்களுக்கு கிடைத்தது.

கன்னியாகுமரியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புவன நந்தீஸ்வரர் கோவில் காணாது போய்விட்டது. இதுபோன்று பல கோடி ரூபாய் மதிப்பிலான சோமஸ் கந்தர் சிலையையும் காணவில்லை. நாகர்கோவிலை அடுத்துள்ள ஒழுகினசேரி அருகில் உள்ள சோழராஜா சிவன் கோயிலில் சோமஸ் கந்தர் சாமி சிலை மற்றும் அம்மன் சிலைகள் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்டுள்ள அம்மன் சிலைகள் அனைத்தும் தாமிரத்தால் செய்யப்பட்டவை. திருடப்பட்ட மற்ற சிலைகள் குறித்து அரசு விசாரணை மேற்கொண்டு, களவு போன அனைத்து சாமி சிலைகளையும் மீட்க வேண்டும்.

கோவில்களை பாதுகாப்பது போல் கண் போன்று கோயில் சிலைகளையும் பாதுகாப்பாக கண்காணிக்க வேண்டியது அரசின் கடமை. கோயில்கள், வழிபாட்டு சிலைகளின் பாதுகாப்பு என்ற பணியில், மூன்றாவது கண்ணாக உலக சிவனடியார் கூட்டமைப்பையும் நான் கருதுகிறேன்.

உலக சிவனடியார் கூட்டமைப்பு கூட்டத்தைத் கூட்டி தமிழகம் முழுவதும் உள்ள  திருக்கோயில்களை புனரமைப்பு செய்வது எனது முயற்சி. குமரி மாவட்டத்தின் தனி சிறப்பு பெற்ற சிவாலய ஓட்டம் என்ற பக்தி முயற்சி நாளில் கன்னியாகுமரியில் இருப்பது ஒரு பெருமை மிகுந்த மகிழ்ச்சியை நாங்கள் உணர்கிறோம் என தெரிவித்தார்.

த.இ.தாகூர்., கன்னியாகுமரி.

source https://tamil.indianexpress.com/tamilnadu/former-ig-pon-manickavel-says-govt-should-protect-temple-idols-595744/