சனி, 18 பிப்ரவரி, 2023

மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் குண்டர் சட்டத்தில் வழக்கு: தமிழக அரசு உத்தரவு

 17 2 23

மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் குண்டர் சட்டத்தில் வழக்கு: தமிழக அரசு உத்தரவு

பயோ மெடிக்கல் பொருட்களில் வரும் மருத்துவம் சார்ந்த கழிவுகளை பொது இடங்களில் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 14ன் கீழ் “குண்டர்” பற்றிய விளக்கத்தை விரிவுபடுத்துவதாகவும், சட்டவிரோதமாக அப்புறப்படுத்துபவர்களை உள்ளடக்குவதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடிதம் எழுதியுள்ளது.

2021-ம் ஆண்டு சட்டவிரோதமாக குப்பை கொட்டுவதற்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட அனைத்து மாவட்டங்கள் மற்றும் பஞ்சாயத்துகளை முதன்மை செயலாளர் பி.செந்தில் குமார் ஆய்வு செய்தார்.

பயோ-மெடிக்கல் கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டுவதால் ஏற்படும் அச்சுறுத்தல் மிகவும் ஆபத்தானது. தமிழ்நாட்டில் சுகாதாரம் அபாயகரமான சூழ்நிலையில் இதனால் உருவாகிறது என்று கூறிய தமிழக வழக்கறிஞர் ஜெனரலின் கூறியுள்ளார்.

காவல்துறை கண்காணிப்பாளர், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை இணை இயக்குநர், கூடுதல் இயக்குநர், ஊராட்சிகள், மாநகராட்சி ஆணையர், வட்டாரப் போக்குவரத்து ஆணையர் ஆகியோர் அடங்கிய மாவட்ட அளவிலான மருத்துவக் கழிவு மேலாண்மை கண்காணிப்புக் குழுவை அமைக்க பிப்ரவரி 9ஆம் தேதி இந்த உத்தரவு பிறப்பித்தது.

மாவட்ட ஆட்சியரின் கீழ் உள்ள இந்த குழு, மாதம் ஒரு முறையாவது கூடி, மத்திய அரசின் விதிமுறைகளின்படி தொடர் நடவடிக்கை எடுக்கும்.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளில் சட்டவிரோதமாக, மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக 25 புகார்கள் அளித்துள்ள வி.புகழ்வேந்தன், மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/dump-medical-waste-in-public-places-get-arrested-under-goondas-act-595450/