புதன், 15 பிப்ரவரி, 2023

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

 15 2 23

சென்னை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் காலை முதல் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

அதன்படி, சென்னையில் கொடுங்கையூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் 5 இடங்கள் உள்பட பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திருநெல்வேலி, தென்காசி போன்ற மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலியில் டவுன் காரிக்கான்தோப்பு பகுதியில் உள்ள மன்சூர் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், திருநெல்வேலியின் ஏர்வாடியிலும், தென்காசியின் அச்சன்புதூரிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.மயிலாடுதுறை மாவட்டம் வடகரை என்ற இடத்தில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் காலையிலிருந்து திடீர் சோதனை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உக்கடம், குனியமுத்தூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக 7 பேரை காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அவர்களிடம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தற்போது சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா என மொத்தம் 3 மாவட்டங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


source https://news7tamil.live/nia-at-various-places-in-tamil-nadu-officers-check.html

Related Posts: