23 2 23
சேலம் மாநகர காவல்துறை ஆணையராக பணியாற்றி வந்த நஜ்முல் ஹோதா சென்னை ஆவடி போக்குவரத்து காவல் ஆணையராக மாற்றப்பட்ட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி ’கள ஆய்வில் முதல்வர்’ தொடங்கப்பட்டது. இதன் முதல் நிகழ்ச்சியாக வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாக கடந்த பிப்ரவரி 15-ம் தேதி சேலம் மண்டலத்தில் ஆய்வை மேற்கொண்டார். இரண்டு நாட்கள் ஆய்வை மேற்கொண்ட ஸ்டாலின் சேலம், தரும்புரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் நேரடி கள ஆய்வை மேற்கொண்டார்.
இந்த சூழலில், 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாநகர காவல்துறை ஆணையராக நஜ்முல் ஹோதா சென்னை ஆவடி போக்குவரத்து காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ஆவடி போக்குவரத்து ஆணையராக பணியாற்றி வந்த விஜயகுமார் சேலம் மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சென்னை ரயில்வே காவல்துறை டிஐஜி-ஆக பணியாற்றி வந்த விஜயகுமார் ஆவடி சரக சட்ட ஒழுங்கு இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
source https://news7tamil.live/salem-city-police-commissioner-transferred.html