செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

TNTJ #மாநாட்டுத்தீர்மானங்கள். 5 2 2023

 இறைவனின் திருப்பெயரால்... 

TNTJ #மாநாட்டுத்தீர்மானங்கள். 5 2 2023


1. இறைத்தூதரின் போதனைகளை முஸ்லிம்கள் புறக்கணித்து வாழ்ந்து வருகின்றனர், முஸ்லிம்களிடம் மண்டிக்கிடக்கும் அனாச்சாரங்களையும் இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட புதுமைகளையும் ,மூட பழக்க வழக்கங்களையும் முழுமையாக கலைந்திட ஒவ்வொரு முஸ்லிமும் உறுதி ஏற்க வேண்டும், இஸ்லாத்தின் மாண்புகளை பாழாக்கி இஸ்லாமியர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் பெரும் பாதிப்பை பெற்றுத்தரும் இந்த பித் அத்களை தடுக்க இறுதி மூச்சு வரை உழைப்போம் என இம்மாநாட்டில் உறுதி ஏற்கிறோம்


2.  இஸ்லாமிய சமுதாயம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் அதில் ஒன்று கல்வியின்மையாகும்.


 பல கோடி மக்களை கல்வி வேலைவாய்ப்பில் முன்னேற்றுவது என்பது ஒரு அரசுக்குத்தான் சாத்தியம் என்றாலும் இஸ்லாமிய சமூகம் தன்னளவில் செய்ய வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் .கல்வியில் தன்னை முன்னேற்றி கொள்ள உழைக்க வேண்டும் என்று இம்மாநாட்டில் உறுதி ஏற்கிறோம். 


3.  மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து இஸ்லாமியர்களுக்கு விரோதமான சட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களிலும் முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்கின்றன

ஹிஜாப் அணியத்தடை

முத்தலாக் தடை சட்டம் எனும் பெயரில் இஸ்லாமியர்களின் மீதான கைது நடவடிக்கை

இஸ்லாமிய மாணவர்களுக்கான  கல்வி உதவித்தொகை ரத்து குடியுரிமைத்திருத்தச் சட்டம் எனும் பெயரில் இஸ்லாமியர்களின் குடியுரிமையை பறித்தல்

அநியாயமாக இஸ்லாமியர்களின் வீடுகள் புல்டோசரால் இடிப்பது

 UAPA சட்டத்தை தவறாக பயன்படுத்துவது

 என மத்திய அரசு  இஸ்லாமியர்களை துன்புறுத்தி வருகிறது ,இந்த அத்துமீறல்களை வன்மையாக கண்டிக்கிறோம்.


 ஒன்றிய அரசின் இந்த முஸ்லிம் விரோதப்போக்கினை ஜனநாயக ரீதியாக  எதிர் கொள்வோம்  என இம்மாநாட்டின் வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.


4. பாபர் மசூதியை அடுத்து தற்போது மதுரா , காசியில்  உள்ள பள்ளிவாசல்களை அபகரிப்பதற்கான வேலைகளை மத்திய அரசின் ஆசியோடு அவர்களின் ஏவல் படை செய்து வருகிறது , இது வழிபாட்டுத்தளங்கள் சட்டம் ‘1991 க்கு நேரெதிரானது , சங்க பரிவாரங்களின் இந்த சூழ்ச்சியை எதிர்கொள்ள இஸ்லாமிய சமுதாயம் ஜனநாயக ரீதியான களப்போராட்டங்களுக்கு தயாராகும் என இந்த மாநாட்டின் வாயிலாக எச்சரிக்கிறோம்.


5. குஜராத் கலவரத்தின் போது பல்கீஸ்பானுவின் குழந்தை உட்பட பலர் சமூகவிரோதிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். பல்கீஸ்பானுவின் மிகப்பெரிய சட்டப்போராட்டத்திற்கு பின் குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.  


 சமீபத்தில் குஜராத் அரசு சிறப்பு சலுகையை பயன்படுத்தி அக்குற்றவாளிகளை விடுதலை செய்தது.  


 கொடும் குற்றம் செய்தவர்கள் இலகுவான முறையில் விடுவிக்கப்பட்டு  செயல் இந்திய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அமைதியாக வாழ விரும்பும் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.  எனவே சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்து அவர்களை கடுமையாகத் தண்டிக்கும்படி இம்மாநாட்டின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.


6.கொலிஜியம் முறையில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் நியமனத்தை வேண்டுமென்றே தாமதம் செய்து பல சிறந்த நீதிபதிகள் பதவி உயர்வு பெற முடியாமல் தடுத்து வருவது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும். நீதித்துறையை அரசியலாக்க முனையும் பாஜக அரசின் இச்செயலை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கின்றது.


7.பாதிக்கப்படும் முஸ்லிம்கள் ஜனநாயக வழியில்  போராடும் போது தீவிரவாதிகளாகவும்,  வன்முறையாளர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள் அச்செயலை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கின்றது.


மாநில அரசுக்கான கோரிக்கைகள்


8. தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு நடைமுறையில் இருக்கும் கல்வி வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன

 

மூன்றரை சதவீத இடஒதுக்கீடு

 முறையாக பல துறைகளில் வழங்கப்படுவதில்லை

 

மதம் மாறி இஸ்லாத்தை தழுவியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை


ரூஸ்டர் முறையில் சரியான வரிசை முறையில் இஸ்லாமியர்கள் பயன்பெற முடிவதில்லை


 இஸ்லாமியர்களின் சதவீதத்தோடு ஒப்பிடுகையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு குறைவு.


இப்படி பல குளறுபடிகள் இட ஒதுக்கீட்டு நடைமுறையில் இருப்பதை

கருத்தில் கொண்டு தமிழக அரசு இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை அனைவரும் தெளிவாக அறியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் , தமிழகத்தில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் விகிதாச்சார பிரிநிதித்துவ முறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை பெறும் வகையில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இம்மாநாட்டின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.


9. தமிழக சிறைகள் ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்யப்படுகின்றனர்.  ஆனால்  நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது இல்லை.  எனவே மற்ற கைதிகளைப் போலவே இஸ்லாமிய சிறைவாசிகளையும் விடுவிக்க வேண்டும், மதத்தின் பெயரால் அவர்கள் மீது காட்டப்படும் இந்த  வேற்றுமை இந்திய அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிரானது என்றும் ஆதிநாதன் ஆணையத்தின் அறிக்கை மீதான நடவடிக்கையை மாநில அரசு விரைந்து எடுக்க வேண்டும் என இம்மாநாட்டின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.


10. புதுக்கோட்டை இறையூரில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் மனிதாபிமானமற்றது இயற்கை அறத்திற்கு எதிரானது இதை செய்தவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு விரைந்து எடுக்க வேண்டும் என இம்மாநாட்டின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.


ஊடகங்களுக்கான கோரிக்கை


11. ஒன்றிய அரசும் அதன் கொள்கை வழிகாட்டிதல்களும்

 இஸ்லாமியர்களுக்கெதிராகவே உள்ளது.  வெறுப்பரசியலை விதைப்கதற்கு ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் அதிகமாக பயன்படுத்திகொள்கின்றனர்.


 இதற்கு பெரும்பான்மையான தேசிய ஊடகங்களும் , பல வடநாட்டு யூடியுபர்களும் துணைபோகின்றனர்.


 இது அவர்களின் ஊடக அறத்திற்கு எதிரானது , நான்காம் தூண் என்று அழைக்கப்படும் ஊடகத்துறை நியாயத்தின் குரலாய் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் உண்மையை உரக்கச் சொல்லும் பணியை ஊடகங்கள் தொடர்ந்து செய்திட வேண்டும் என்று  இம்மாநாட்டின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.