திங்கள், 12 ஜூன், 2023

முதலமைச்சரிடம் கிராம மக்கள் கோரிக்கை- 12 மணி நேரத்தில் பேருந்து சேவை

 

11 6 23

திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய வந்த முதலமைச்சரிடம் பேருந்து வசதி கேட்டு கிராம மக்கள் கோரிக்கையை அடுத்து 12 மணி நேரத்தில்  கூடுதலாக பேருந்து சேவையை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டத்திற்கு நேற்று வருகை புரிந்தபோது, லால்குடி அடுத்து ஆலங்குடி மகாஜனம் கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி வந்த பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆலங்குடி ஊராட்சியில் பேருந்து சேவை குறைவாக இருப்பதாகவும், இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறினர்.
இந்நிலையில், இந்த கோரிக்கையை முதலமைச்சர் ஏற்று, உடனடியாக பேருந்து வசதியை ஏற்படுத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி காலை 8 மணி மற்றும் மாலை 5.30  மணிக்கு லால்குடியில் இருந்து ஆலங்குடி மகாஜனத்திற்கும், காலை 8:35 மணி மற்றும் மாலை 6:05 மணிக்கு ஆலங்குடி மாகாஜணத்தில் இருந்து லால்குடிக்கும் என தினசரி நான்கு நடைகள் கூடுதல் பேருந்து சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது.
இவ்வழித்தடத்தில் காலை மற்றும் மாலையில் பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் பள்ளி மாணாவர்கள் மற்றும் கட்டணமில்லாமல் மகளிர் எளிதில் பயணம் செய்யும் வகையில், முதல்வர் ஆணைக்கிணங்க நகர பேருந்து மூலம் கூடுதலாக பேருந்து இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சௌம்யா.மோ

source https://news7tamil.live/after-public-request-to-cm-bus-facility-was-given-to-alangudi-magajanam-in-12-hours.html

Related Posts: