14 6 23
தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த செய்திக் குறிப்பில், “மத்திய புலனாய்வு குழு (சிபிஐ) விசாரணை நடத்துவதாக இருந்தால் அதற்கு அந்தந்த மாநில அரசுகளின் முன் அனுமதி பெற வேண்டும் என 1946 டெல்லி சிறப்பு காவல் அமைப்பு சட்டம் பிரிவு 6-ல் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கடந்த 1989 மற்றும் 1992ஆம் ஆண்டில் இந்தச் சட்டப்பிரிவின் கீழ் சில வகை வழக்குகளுக்கு என வழங்கப்பட்டு இருந்த பொதுவான அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற ஆணையிடப்பட்டு உள்ளது.
இனி புலனாய்வு அமைப்பு தமிழ்நாட்டில் விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக தமிழ்நாடு அரசின் முன் அனுமதியை பெற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது போன்ற ஆணையை ஏற்கனவே மேற்கு வங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் பிறப்பித்துள்ளன.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நெஞ்சு வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மாநில அரசு இந்த செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/the-tn-govt-has-issued-an-order-that-the-permission-of-the-state-government-is-necessary-to-conduct-a-cbi-investigation-696367/