அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பானி சகோதரர்களில் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் கடனில் சிக்கித் தவித்து வருகிறது. ஜியோவின் வருகையும் அதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் விற்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை சொத்துகளை விற்க முடியாததால், ஸ்வீடன் நாட்டின் எரிக்சன் நிறுவனம் தேசிய சட்ட தீர்ப்பாயத்தில் புகார் அளித்தது.
மேலும், 550 கோடி ரூபாயை தங்களுக்கு திருப்பி கொடுக்க உத்தரவிடுமாறும் எரிக்சன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த இக்கட்டான சூழலில் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்க அனில் அம்பானி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
source ns7.tv