source ns7.tv
2019-2020-ம் நிதி நிலை அறிக்கையில், ஒரு ரூபாய்க்கான வரவு மற்றும் செலவு பற்றிய விவரம்.
ஒரு ரூபாயில் வரவை பொருத்தவரை வருமான வரியாக 17 காசுகளாகவும், கார்ப்பரேஷன் வரியாக 21 காசுகளாகவும் கிடைக்கும். கடன்கள், அடமானங்கள் மூலம் 19 காசுகளும், சுங்க வரி மூலமாக 4 காசுகள் கிடைக்கும். மத்திய உற்பத்தி வரிகள் மூலம் 7 காசுகளும், சரக்கு மற்றும் சேவை வரி மூலம் 21 காசுகளும் கிடைக்கப்பெறும். மேலும் வரியல்லாத வருவாய் மூலம் 8 காசுகளும், கடன் மூலதனம் வாயிலாக 3 காசுகளும் ஒரு ரூபாயில் வரவு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செலவை பொறுத்தவரை, ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கான செலவிலும், வட்டிக்கு செலுத்திய தொகை 18 காசுகளாக இருக்கும். பாதுகாப்புக்கு 8 காசுகளும், மானியங்களுக்கு 9 காசுகளும், நிதி கமிஷன் மற்றும் பிற பரிமாற்றங்களுக்கு 8 காசுகளும் செலவாகும். மாநிலங்களுக்கு வரி பங்கு 23 காசுகளும், பிற செலவினங்களுக்கு 8 காசுகளும் செலவிடப்படும். இதேபோல் மத்திய அரசு திட்டங்களுக்கு 12 காசுகளும், மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களுக்கு 9 காசுகளுக்கும் செலவு செய்யப்படும்.