வியாழன், 1 ஜூன், 2023

வெளிநாட்டு பயணம் முடிவு; இன்று தமிழகம் திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!…

 

சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்.

வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் கடந்த 9 நாட்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.

இரு நாடுகளிலும் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்றார். பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் அப்போது கையெழுத்தாகின. இந்த நிலையில் தமது வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு இன்றிரவு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

source https://news7tamil.live/end-of-foreign-travel-chief-minister-m-k-stalin-is-returning-to-tamil-nadu-today.html

31 5 23


Related Posts:

  • Politics Game (function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src … Read More
  • "ஜெய் ஹிந்த்" இந்த வார்த்தை. சுகந்திரத்துக்கு முன்பு நடந்த மத கலவரத்தின் போது இந்துக்கள் தங்கள் வெற்றியை கொண்டாட "ஜெய் ஹிந்த்" சொன்னது தான் இந்த வார்த்தை.1924,1935,1947-48ல எல்லா… Read More
  • காணவில்லை உங்களால் இயலுமெனில் பகிருங்கள் ! இவர் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மாங்குடியை சேர்ந்தவர் திருச்சியில் 24-1-2016 அன்று முதல் காணவில்லை … Read More
  • குடியரசு தினம் 67வது குடியரசு தினம் கொண்டாடுகிறோம். ஆனால் இன்னும் பயந்து கொண்டு தகுந்த பாதுகாப்புடன் தான் நம் நாட்டின் மூவர்ணம் பூசிய கொடியை ஏற்ற வேண்டிய சூழல். … Read More
  • பெற்றோர்கள் செய்யும் தவறுகள்>> *பிள்ளை தன் தந்தையைப் பார்த்து எனக்கு PHONE வேண்டும் எனக் கேட்டால் தந்தை கேட்கிறார் IPHONE வேண்டுமா?/SAMUNG GALAXY வேண்டுமா? *பெற்றோர்களே! இது ந… Read More