சுற்றறிக்கை : 137 / 2023
தேதி : 05.07.2023
இறைவனின் திருப்பெயரால்...
ஆளும் பாஜக வளர்ச்சி பணிகளை வைத்து தேர்தலை சந்திக்க இயலாது என்பதால் பொது சிவில் சட்டத்தை தற்போது கையிலெடுத்துள்ளது.
21 வது சட்ட ஆணையம் தன்னுடைய அறிக்கையில் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code - UCC) அவசியம் இல்லை, தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல என்று குறிப்பிட்ட பிறகும் எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்டமாக்கிட முனைப்பு காட்டி வருகிறது.
பல கொள்கை சார்ந்து வாழும் இந்திய தேசத்தில் இது சாத்தியமா என்பதை கூட சிந்திக்கும் திறன் இல்லாதவர்களாக ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். வட கிழக்கு மாநிலங்களில் தற்போது கடுமையான எதிர்ப்புகளை பழங்குடியின இந்து மக்களே வெளிப்படுத்தி வருகின்றனர்.
சிஏஏ கருப்பு சட்டத்தை ஆதரித்து அரங்கேற்ற காரணமாக இருந்த அதிமுக தற்போது பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிரைவேற்றி உள்ளது. பாஜகவுடன் கூட்டணி இருக்கும் நிலையில் நாட்டு நலன் கருதி அதிமுக இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.
அதே போல நாட்டின் மதச்சார்பற்ற தன்மையின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அத்தனை கட்சிகளும் ஒருங்கிணைந்து பொது சிவில் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் ஒன்றிய அரசு கொண்டு வர துடிக்கும் பொது சிவில் சட்டத்தை ஆளும் திமுக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் எனவும், அடுத்து வரும் முக்கிய நிகழ்ச்சிகளிலும், எதிர் வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
ஆர். அப்துல் கரீம்,
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.