ரொமிடா பேகம் உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் வசித்து வருகிறார். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மிகவும் ஆபத்தான இடம் இது…
வங்காள தேசம், காக்ஸ் பஸாரில் உள்ள அகதிகள் முகாமில், ஒரு பகுதியின் தலைவியான ரொமிடாவின் முக்கிய குறிக்கோள் இங்குள்ள பெண்களை பாதுகாப்பாக வைத்திருப்பது தான்.
இதுதொடர்பாக DW Tamil யூடியூப் சேனலில் வெளியான வீடியோ
‘இங்கு நாங்கள் எப்பொழுதும் குடிசைகளுக்குள் அடைந்தபடி தான் இருக்கிறோம். முகாமில் உள்ள பல பெண்களுக்கு இது மிகவும் கடினமாக உள்ளது. இதனால் பலர் மனச்சோர்வு அடைகின்றனர்.
ரோஹிங்கியா சமூகத்தில் உள்ள பலர், பெண்கள் இவ்வாறு உள்ளேதான் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள், பெண்கள் முகத்திரை இன்றி வெளியே வந்தால், அவர்கள் ரோஹிங்யா போராளிகளால் தாக்கப்படலாம்… என்கிறார் ரொமிடா…
நாங்கள் பெண்களை புர்கா அணிய சொல்கிறோம், புர்கா இல்லாமல் நடமாடினால் முதலில் அவர்கள் எச்சரிக்கப்படுவார்கள், அப்படியும் அவர்கள் கேட்கவில்லை என்றால் அவர்கள் தாக்கப்படுவார்கள், அவர்களது கணவர்களும் தான்… இறந்து போகாத அளவிற்கு தாக்கப்படுவார்கள்… என்கிறார் ஒரு ரோஹிங்கியா போராளி…
தினசரி கழிப்பறை வசிதிகளை அணுகுவது கூட அவர்களுக்கு சவாலாக உள்ளது…
இங்குள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது, இளம்பெண்கள், ஆண்களுடன் கழிப்பறைக்கு செல்ல வரிசையில் நிற்கும் போது வெட்கப்படுவார்கள், என்று கூறுகிறார் ரொமிடா
பாலியல் சம்பவங்கள் இங்கு நிறைய நடக்கும் என்று பல பெண்கள் DW விடம் கூறினார்கள், மேலும் ரோஹிங்கியா போராளி குழுக்கள் மக்களை மிரட்டுவதற்காக கட த்தியும் செல்கின்றனர்…
முகாமில் ரொமிடாவின் பங்களிப்பு காரணமாக, அவர் போராளிக் குழுக்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். அதனால் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என அவர் முடிவு செய்துள்ளார்.
தனது பதவியை துறப்பது வருத்தமளிப்பதாக ரொமிடா கூறுகிறார்….
ஆனால் இதனால் அவர் உயிர்பிழைக்க வாய்ப்பு இருக்கிறது…
28 7 23
source https://tamil.indianexpress.com/lifestyle/west-begal-rohingya-refugee-camp-rohingya-women-abuse-rohingya-genocide-730488/